Wednesday 21 October 2015

மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 23,340 டன் பருப்பு வகைகள் பறிமுதல்





மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரே நாளில் 23,340 டன் பருப்பு வகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் 16 மாவட்டங்களில் 276 இடங்களில் திங்கள் கிழமை அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த மிகப்பெரிய அதிரடி ரெய்டு எதிரொலியாக மும்பையில் இன்று (புதன்கிழமை) பருப்பு வகைகள் கிலோவுக்கு ரூ.3 வரை குறைந்துள்ளது. அதாவது மும்பையில் துவரம் பருப்பு விலை கிலோ ஒன்றுக்கு ரூ.175-ஆக குறைந்திருக்கிறது.
இது குறித்து நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, "மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் 16 மாவட்டங்களில் 276 இடங்களில் திங்கள் கிழமை அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், ஒரே நாளில் 23,340 டன் பருப்பு வகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மும்பை, தானே, பான்வெல் ஆகிய பகுதிகளிலேயே அதிக அளவில் பருப்பு வகைகள் பதுக்கப்பட்டிருந்தன. பதுக்கல்காரர்கள், கள்ளச்சந்தையில் பருப்பு விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதன்மூலம் நிச்சயமாக சந்தையில் பருப்பு வகைகளின் இருப்பை உறுதி செய்ய முடியும்; விலையையும் கட்டுக்குள் கொண்டுவர முடியும். அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ் பதுக்கல்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.
அதிரடி ரெய்டு எதிரொலியாக மும்பையில் இன்று (புதன்கிழமை) பருப்பு வகைகள் கிலோவுக்கு ரூ.3 வரை குறைந்துள்ளது. அதாவது மும்பையில் துவரம் பருப்பு விலை கிலோ ஒன்றுக்கு ரூ.175-ஆக குறைந்திருக்கிறது. உளுந்து விலை கிலோவுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிலோ ரூ.165-க்கும், மசூர் பருப்பு விலை ஒரு கிலோ ரூ.100-க்கும், கிராம் பருப்பு ரூ.72-க்கும் விற்கப்படுகிறது" என்றார்.

No comments:

Post a Comment