Monday, 26 October 2015

அம்மாவின் சாதனையை இந்த உலகமே அறியும் இருப்பினும் அம்மாவின் சாதனையை அனைவரும் தெரிந்து கொள்ள நாம் விளம்பரப்படுத்தும் பணியை தீவிரப்படுத்த வேண்டும் – கரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளர் விஜயபாஸ்கர் கட்சியினருக்கு கோரிக்கை





கரூர் மாவட்டம் முழுவதும் அம்மா ஆட்சியின் நான்காண்டு சாதனை விளக்க விளம்பரம் தீவிரப்படுத்த வேண்டும். அனைத்து பஞ்சாயத்துகளிலும் வீதி, வீதியாக சுவரொட்டி, பிளக்ஸ், பேனர்கள் வைக்க வேண்டுமென மாவட்ட செயலாளர் விஜயபாஸ்கர் கோரிக்கை
கரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளர் விஜயபாஸ்கர் பொறுப்பேற்றதிலிருந்து அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகியோரின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியிலிருந்து, கட்சியின் அடிப்படை தொண்டர்கள் வரை வீடு, வீடாக சென்று ஆசி பெற்று வருகிறார். இந்நிலையில் எப்போதும் பூட்டிக்கிடந்த அ.தி.மு.க அலுவலகம் தற்போது நாள் ஒன்றுக்கு இரண்டு அல்லது மூன்று கூட்டங்கள் நடத்துவதோடு, கட்சி முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசித்து வருகிறார். இந்நிலையில் அ.தி.மு.க பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா அவர்களின் உத்திரவிற்கிணங்க கரூர் மாவட்ட அ.தி.மு.க அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் அண்மையில் வார்டு, வார்டாகவும், நகர கழகம் மற்றும் பிற அணிகள் கூட்டம் என பல்வேறு கூட்டங்கள் நடைபெற்று வருவது கட்சியில் தற்போது மிகுந்த சுறுசுறுப்படைந்துள்ளது.
இந்திய அளவில், குறிப்பாக தமிழகத்தில்   முதலமைச்சர் ஜெயலலிதா  தலைமையிலான அரசு பொறுப்பேற்று, நான்காண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பிலும், அ.தி.மு.க சார்பிலும் அனைத்து மாவட்டங்களிலும்  அரசின் நான்காண்டு சாதனைகளை விளக்கிடும் புகைப்படக் கண்காட்சி, அ.தி.மு.க சார்பில் விளம்பரம் அமைக்கும் பணி தீவிரப்படுத்த வேண்டுமென முதல்வரும், அ.தி.மு.க பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் உத்திரவிற்கிணங்க கரூர் மாவட்ட அ.தி.மு.க அலுவலகத்தில் கட்சியின் மாவட்ட செயலாளர் விஜயபாஸ்கர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மாவட்ட செயலாளர் விஜயபாஸ்கர் தெரிவித்ததாவது., இதில் அம்மா தமிழக முதல்வராக பொறுப்பேற்றதிலிருந்து., ஏழை மக்கள் வயிறார சாப்பிட தமிழகம் முழுவதும் 298 அம்மா உணவகங்கள், அம்மா உப்பு, அம்மா சிமென்ட் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. முல்லை பெரியாறு அணையில் முதல்கட்டமாக 142 அடி தண்ணீர் தேக்கப்பட்டது, காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிடச் செய்து தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்பட்டது. இது தவிர ஏழைகளுக்கு இலவச கறவை பசுக்கள், ஆடுகள், மின்விசிறி, மிக்சி மற்றும் கிரைண்டர்கள், மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. இன்னும் பல திட்டங்களை செயல்படுத்துவதில் உலக அளவில் அம்மா செய்து வருகிறார். மேலும் விரிவு படுத்தப்பட்ட திருக்கோயில்களின் அன்னதான திட்டத்தில் பல லட்சம் பக்தர்கள் பயன்பெற்று வருகின்றனர். கடந்த மைனாரிட்டி அரசு ரூ 2 க்கு அரிசியை விற்றதுடன் அண்டைய மாநிலத்திற்கு அரிசி கடத்தி மக்கள் பணத்தை வரி ஏய்ப்பு செய்ததுடன் இலவசம் என்று வண்ணத்தொலைகாட்சியை கொடுத்து அதன் மூலம் அவர்களின் பேரன்களின் கேபிள் கட்டணத்தை உயர்த்தினார். ஆனால் அம்மா பொறுப்பேற்றவுடன் கேபிள் கட்டணத்தை குறைத்ததுடன், ஏழை, எளிய மக்களுக்கு பல நன்மைகளை செய்து வருகிறார். அம்மாவின் சாதனையை நாடு மட்டுமல்ல, உலகமே அறியும் இருப்பினும் கரூர் மாவட்டத்தில்  அதிமுகவினர் ஒன்றியம், நகரம், பேரூராட்சி என அனைத்து பகுதிகளிலும் பிரச்சாரக் கூட்டங்கள், துண்டு பிரசுரங்கள், சுவரொட்டிகள், பிளக்ஸ், பேனர்கள் அமைப்பதோடு அதன் மூலம் அ.தி.மு.க வினர் பிரச்சாரப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்'' நிர்வாகிகளுக்கு கோரிக்கை விடுத்தார். எது எப்படியோ கடந்த சில ஆண்டுகளாக பூட்டிக்கிடந்த அ.தி.மு.க அலுவலகம் தற்போது திறக்கப்பட்டுதும் மட்டுமில்லாமல் கரூர் மாவட்ட அளவில் அ.தி.மு.க வினர் வந்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது கரூர் மாவட்ட அளவில் அம்மாவின் பிறந்த நாள் மற்றும் வரும் சட்டமன்ற தேர்தலில் முந்திக்கொள்ளும் வகையில் சுவரொட்டிகள் ஆங்காங்கே எழுதி வருகின்றனர். இதிலும் தி.மு.க வை பின்னுக்கு தள்ளியது அ.தி.மு.க என்ற பெருமை விளம்பரத்தில் சேறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இக்கூட்டத்திற்கு முன்னதாக கரூர் நகர செயலாளர் வை.நெடுஞ்செழியன் முன்னிலை வகித்தார். கரூர் மாவட்ட ஜெ பேரவை செயலாளரும், கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ வுமான எஸ்.காமராஜ், கரூர் மாவட்ட பொருளாளர் பி.கே.எஸ்.முரளி உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்

மேலும் இக்கூட்டத்தில் பேசிய ஜெ பேரவை செயலாளரும், கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ வுமான எஸ்.காமராஜ் கரூர் மாவட்டத்தில் ஒரு இடத்தில் கூட தி.மு.க விளம்பரம் இல்லாமல் பார்த்துக் கொள்வது அ.தி.மு.க வினராகிய நமது கடமை என கூறினார். அதற்காக தற்போதே அப்பணிகளை தொடங்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.

No comments:

Post a Comment