Saturday, 31 October 2015

மூடு டாஸ்மாக்கை மூடு.. ஊத்தி கொடுத்த உத்தமி போயஸ் கார்டனில் உல்லாசம்' என்ற கோவனின் பாடலை பாடி, முடிந்தால் என் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வழக்கு போடட்டும் என்று திருச்சியில் வைகோ தமிழக அரசுக்கு பகிரங்க சவால். - சிறுபான்மையினர், தலித்துகள் மீது தாக்குதல்: திருச்சியில் வைகோ, திருமா, முத்தரசன் கண்டன போராட்டம்!!



நாடு முழுவதும் அதிகரித்து வரும் சிறுபான்மையினர் மற்றும் தலித்துகள் மீதான தாக்குதலைக் கண்டித்து திருச்சியில் மக்கள் நலனுக்கான கூட்டியக்கம் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாரதிய ஜனதா ஆட்சியில் அதிகரித்து வரும் சிறுபான்மையினர் மற்றும் தலித் மக்கள் மீதான வன்முறைகள்; கருத்துரிமைக்கு எதிரான தாக்குதல்களைக் கண்டித்து இன்று திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே மக்கள் நலக் கூட்டியக்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் டி.கே.ரங்கராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, டாஸ்மாக்கை மூடக் கோரி பாடல் வெளியிட்ட ம.க.இ.க. பாடகர் கோவன் கைது செய்யப்பட்டுள்ளது கண்டனத்துக்கு உரியது. அ.தி.மு.க, தி.மு.க கட்சிகளை தமிழக அரசியலில் இருந்து தூக்கி எறிய வேண்டும் என்றார். மூடு டாஸ்மாக்கை மூடு.. ஊத்தி கொடுத்த உத்தமி போயஸ் கார்டனில் உல்லாசம்' என்ற கோவனின் பாடலை பாடி,
முடிந்தால் என் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வழக்கு போடட்டும் என்று
திருச்சியில் வைகோ தமிழக அரசுக்கு பகிரங்க சவால் விடுத்தார் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வை.கோ.

No comments:

Post a Comment