Saturday 24 October 2015

மருதுபாண்டியர்களுக்கு வீரவணக்கம் செலுத்திய வை.கோ



மருது பாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் தமிழ்நாட்டில் ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்ட முன்னோடிகளுள் குறிப்பிடத்தக்கவர்கள். ஆங்கிலேயரைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்ட 1785முதல் 1801 இறுதி வரை ஆயுதம் தாங்கிப் போராடினார்கள். பெரிய மருது, சின்ன மருது எனப்படும் இவர்கள் ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிய அனைத்திந்திய குழுக்களையும் ஒன்றிணைத்துத் திரட்ட முயன்ற போதுதான் ஆங்கிலேயரின் அதிருப்திக்கும் கோபத்திற்கும் ஆளானார்கள். இவர்களது களம் சிவகங்கைச்சீமையைச் சேர்ந்த காளையார்கோயில் ஆகும்.
ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியரால் 1801 அக்டோபர் 24 இல் திருப்புத்தூரில் இவ்விருவரும் தூக்கிலிடப்பட்டனர். இவர்களது நினைவாலயம் காளையார் கோவிலில் அமைந்துள்ளது.

சுதந்திரப் போராட்ட வீரர்களான மருதுபாண்டியர்கள் நினைவிடத்திற்று இன்று சென்ற மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள், மருது சகோதரர்களுக் வீரவணக்கம் செலுத்தினார். சிவகங்கை மாவட்டச் செயலாளர் புலவர் செவந்தியப்பன் உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகளும், தோழர்களும் கலந்துகொண்டு வீரவணக்கம் செலுத்தினர்

No comments:

Post a Comment