தமிழக
அரசின் சீரிய திட்டங்களை திறம்பட வெளிக்கொணர்வதில் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள செய்திமக்கள்
தொடர்பு துறைக்கு தான் முதல் பெயர் சேரும்.
இந்த அளவில் மத்திய, மாநில அரசின் நல்ல பல திட்டங்களை
மக்களிடையே வெளிக்கொணரும் செய்திமக்கள் தொடர்பு துறையில் தமிழக அரசின் கட்டுப்பாட்டில்
சென்னை நீங்கலாக கரூர், திருச்சி, நாமக்கல்,
திண்டுக்கல் உள்ளிட்ட 31 மாவட்டங்கள் உள்ளன.
இந்நிலையில்
செய்திகளை அனுப்பி மக்களிடையே பெரும் வரவேற்பை பெறுவது மட்டுமில்லாமல், அரசின் சாதனைகளை விளக்கி
வெற்றிக்கதைகள் எனப்படும் சக்சஸ் ஸ்டோரி, அரசின் வளர்ச்சிப் பணிகள்
குறித்த செய்தியாளர்கள் பயணம், திரையரங்க ஆய்வு, வீடியோ வாகன மூலம் விளம்பரம், அரசின் சாதனைகளை விளக்கி
துண்டுபிரச்சுரங்கள், மடிப்புக்கையேடு, சிறியபுத்தகம் எனப்படும் புக்லெட் ஆகியவனவற்றைகளை வெளியிடுவது என பல்வேறு சிறப்பு
வெளியீடுகளில் மாநில அளவில் கரூர் முதலிடம் பிடித்துள்ளது. மேலும்
இந்த முதலிடம் ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மாதங்களிலும் முதலிடம்
பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து செய்திமக்கள்
தொடர்பு துறைக்கு முதலிடம் கிடைத்ததை தொடர்ந்து அரசு அதிகாரிகள் பலரும் செய்திமக்கள்
தொடர்பு துறை அலுவலர் லெ.பாண்டி, மற்றும்
துறை அலுவலர்கள், புகைப்படக்காரரை பாராட்டிய வண்ணம் உள்ளனர்.
No comments:
Post a Comment