ஆட்சி மாறினாலும்
காட்சி மாறாத நிலை – அமைச்சர் பதவி பறிக்கப்பட்டும் பின்பும் பவர் குறையாத செந்தில்
பாலாஜி – அம்மாவை மாவட்ட செயலாளர் நியமித்தாலும், அம்மாவின் தலைமை கழக பேச்சாளரின்
கட்டுபாட்டிற்குள் இருக்கும் உள்ளூர் தொலைக்காட்சிகள் மட்டும் ஏற்றுக்கொள்ளாதது ஏன்
தமிழக அளவில் குறைந்த
காலத்தில் ஒன்றிய கவுன்சிலர் முதல் எம்.எல்.ஏ, அமைச்சர் என முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட
செந்தில் பாலாஜி பின்பு ஆங்கில் சேனல்களில் பேசப்பட்ட செந்தில் பாலாஜி சாதாரண அ.தி.மு.க
தொண்டன் என மனதில் நினைக்காமல் எண்ணிப்பார்க்க முடியாத இடத்தில் அ.தி.மு.க நிரந்தர
பொதுச்செயலாளர் ஜெயலலிதா செந்தில் பாலாஜிக்கு உரிய பதவியை அளித்தார். ஆனால் செந்தில்
பாலாஜியோ அவரின் பேராசையால் தனது அமைச்சர்
பதவியையும், மாவட்ட செயலாளர் பதவியையும் இழந்தார். இருந்தும் கூட கடந்த 4 ½ ஆண்டுகளில்
அமைச்சராக இருந்த போது, அவருக்கு அடிமையாக வாழ்ந்த அமைச்சரின் உண்மை விசுவாசமிக்க கரூர்
மாவட்ட பொறுப்பாளர்கள், இன்னமும், அவரின் கண் அசைவிற்கு இணங்க செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள்.
உதாரணத்திற்கு சொல்லப் போனால் அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா செந்தில் பாலாஜியின்
பதவி பறிப்பிற்கு பின்பு நடைபெற்ற கட்சி ஆலோசனை கூட்டத்தில் 5 அமைச்சர்கள் கலந்து கொண்டு
கரூரின் நிலைப்பாடுகள் குறித்து ஜெ கேட்டறிந்தார். அந்நிகழ்ச்சியில் அம்மாவின் பெயரை
சொல்லும் பொழுது கூட கை தட்டாத மாஜியின் ஆதரவாளர்கள், செந்தில் பாலாஜியின் பெயரை கூறும்
போது, உடனே இந்த பக்கம் 14 பேர் கொண்ட குழுக்கள், இந்த பக்கம் 14 பேர் கொண்ட குழுக்கள்
என இருக்குழுக்களாக பிரிந்து கைதட்டினார்கள். அந்தளவுக்கு அவர் மேல் பாசமா, அல்லது
அவரது பினாமி சொத்துக்கள் மீதுள்ள பாசமா, இப்படி இருக்கும் போது பவர் குறையாத மாஜி
அமைச்சர் தற்போது கரூர் மாவட்ட செயலாளராக, அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்த
விஜயபாஸ்கர், பொறுப்பு கொடுத்த பின்பு கரூர் மாவட்டத்தில் முதன் முறையாக வரும் பொழுதும்,
அவர் கட்சியினர், மெகா படை சூழ அ.தி.மு.க வின் மிகப்பெரிய விழா போல் எளிய தொண்டர் முதல்
முக்கிய நிர்வாகிகள் என பல்வேறு பேர் கலந்து கொண்டு நடைபெற்ற வெங்கமேடு அண்ணா சிலைக்கும்,
எம்.ஜி.ஆர் சிலைக்கும் மாலை அணிவித்த நிகழ்ச்சி மற்ற கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இச்சூழ்நிலையில் அ.தி.மு.க வின் கொள்கை பரப்பு சேனலாக செயல்பட்டு வந்த ஜெயம் டி.வி,
வானவில் பிளஸ், உள்ளூர் தொலைகாட்சிகளில் இரவு இந்த செய்திகள் வரும் என எதிர்பார்த்த
நிலையில் மாவட்ட செயலாளர் விஜய பாஸ்கர் அண்ணா, எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்த நிகழ்ச்சிகள்
ஒளிபரப்ப செய்யப்பட வில்லை. அப்போது தான் தெரிய வந்தது இந்த தொலைகாட்சிகள் அ.தி.மு.க
விற்காக, அம்மாவின் ஆட்சிக்காக ஏற்படுத்த பட வில்லை, எல்லாம் மாஜி அமைச்சர் செந்தில்
பாலாஜி க்கு மட்டும் தான் என பகிரங்கமாக தெரியவந்தது.
இச்சூழ்நிலையில்
ஏற்கனவே அமைச்சர் மாஜி அமைச்சர் ஆனதையொட்டி, டேக் டி.வி என்ற அரசு டி.வி உடனடியாக நிறுத்தப்பட்டது.
அதில் அம்மாவின் செய்திகளையும், நிகழ்ச்சிகளையும், ஒளிபரப்பு செய்வதை விட அப்போதைய
அமைச்சர் செந்தில் பாலாஜியின் செய்திகளையும், நிகழ்ச்சிகளை மட்டும் தான் ஒளிபரப்பியது.
இவர் சாமி கும்பிடுவது உள்பட கட்சி நிகழ்ச்சிக்கள் வரை அனைத்து செய்திகளையும் இலவசமாக
அப்போதைய அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மட்டும் தான் ஒளிபரப்பி வந்தது. பிறகு மற்ற
செய்திகளில் இதை வெளியிட்ட பிறகு தற்போது டேக் டி.வி என்ற அரசு சேனல் வெளியிட்டு ஒளிபரப்பி
வருகிறது. தனது முழு அதிகாரமும் கரூரில் உள்ள அரசு கட்டுப்பாட்டு சேனலில் முழு அதிகாரம்
செலுத்தி வரும் செந்தில் பாலாஜியின் கட்டுப்பாட்டிற்குள் வரும் செய்தி சேனல்கள் மீது
அம்மா நடவடிக்கை எடுப்பாரா என இரத்தத்தின் இரத்தங்கள் கொதிப்படைந்துள்ளனர். நடவடிக்கை
எடுக்குமா அரசு கேபிள் டி.வி, மற்றும் தமிழ்நாடு கேபிள் டி.வி கார்ப்பேரேஷன் தலைவர்
உடுமலை இராதாகிருஷ்ணன் நடவடிக்கை எடுப்பாரா ? ஒருவேளை அம்மா நியமனம் செய்த விஜய பாஸ்கரை
உள்ளூர் தொலைக்காட்சியை நடத்தி வரும் அ.தி.மு.க வின் தலைமை கழக பேச்சாளர் ஜெயம் மூர்த்தி
அவர் ஏற்றுக் கொள்ளவில்லையா என கேள்விக்குறியாகி வருகிறது. மேலும் இந்நிலையில் ஜெயம்
மூர்த்தி எனப்படும், தலைமை கழக பேச்சாளர் ஜெயம் மூர்த்தி ஏற்கனவே சங்கொலி இதழான சங்கொலி
மூர்த்தி என அழைக்கபட்டு அதில் ஆட்டையை போட்ட பணத்தை ம.தி.மு.க விற்கு தராமல் ஓடி வந்தவர்,.
என்பது, அரசுக்கு ஐ.பி கொடுத்து தனது பெயரை சந்திரசேகரன் என்ற மாற்றி வைத்து கொண்டார்
என்பது குறிப்பிடத்தக்கது,.
No comments:
Post a Comment