Friday 30 October 2015

ஏ சாமியோ ? நாங்களும் இருக்கம் சாமியோ ? மக்களவை துணை சபாநாயகரிடம் தங்கள் குறைகளை கொட்டி தீர்க்க வந்த நரிக்குறவர்கள் – கரூர் அருகே பரபரப்பு




கரூர் அருகே முற்றுகையிடப்போவதை அறிந்த மக்களவை துணைசபாநாயகர் முந்தியடித்துக் கொண்டு மாற்று வழியில் தப்பினார் – மாஜி அமைச்சரும் தப்பினார் – குடிநீர் கேட்டும், சுகாதார வசதி கேட்டும் நரிக்குறவர் இன மக்கள் திடீர் சாலைமறியலால் பரபரப்பு
கரூர் ,மாவட்டம், மண்மங்கலம் வட்டம், அரசு காலனி அருகே உள்ள வேட்டைக்காரன்புதூரில் கடந்த பல வருடங்களாக கரூர் நகராட்சியில் இருந்து கொட்டப்படும் கழிவுகளால் அப்பகுதியில் வசிக்கும் நரிக்குறவர் இன மக்கள் ஈக்கள் மற்றும் கொசுக்கள் தொல்லையோடு நீண்ட நாட்களாக சுகாதார சீர்கேட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கரூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜியிடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில்  கடந்த சில தினங்களாக தண்ணீர் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதை பற்றி பல முறை மனுக்களாகவும், நேரிடையாகவும் புகார் தெரிவித்த அப்பகுதி நரிக்குறவர் இன மக்கள் சுமார் 100 ற்கும் மேற்பட்டோர் இன்று அரசு விழாவான விலையில்லா மடிக்கணினி வழங்குவதற்கு மாஜி அமைச்சர் செந்தில் பாலாஜியும், மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை மற்றும் மாவட்ட ஆட்சியர் ஜெயந்தி ஆகியோர் அப்பகுதியை அடுத்த ரெங்கநாதன் பேட்டை, நெரூர் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் மடிக்கணினி வழங்கி விட்டு கரூர் வந்தார். அப்போது அந்த சம்பவத்தை அறிந்த அப்பகுதியை சார்ந்த நரிக்குறவர் இன மக்கள் அச்சமூகத்தை சார்ந்த தலைவர் கஜேந்திரன் தலைமையில் முற்றுகையிட முயன்றனர். இச்சம்பவத்தை அறிந்த மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை, மாஜி அமைச்சர் செந்தில் பாலாஜி வண்டியை வேறு பக்கம் திருப்புங்கள் என்று மாற்று வழியில் சென்றனர். காலிகுடங்களுடன் முற்றுகையில் ஈடுபட முயன்ற நரிக்குறவர்கள் ஏமாற்றத்துடன் இருந்ததுடன், அச்சம்பவத்தை அறிந்த வருவாய்துறை மற்றும் காவல்துறையினர் இந்த பிரச்சினை மீது தனிக்கவனம் செலுத்துவதாக கூறி சமாதான படுத்தியதையடுத்து கலைந்து சென்றனர்.

எது எப்படியோ அவர்களும் மனிதர்கள் தானுங்க ! சட்டசபை உறுப்பினரிலிருந்து பஞ்சாயத்து தலைவர் வரை தங்களது அரசியல் சுய நலத் தேவைக்காக பலமுறை காலில் விழுந்து ஓட்டுகள் வாங்கி குவிக்கும் இவர்களது நலனில் ஏன் மெத்தனம் காண்கின்றனர் என்பது தெரியவில்லை. மேலும் இவர்கள் அனைவரும் எம்.ஜி.ஆர் காலத்திலே இருந்து அ.தி.மு.க வினர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு வேளை மாஜிக்கு பதவி பறிப்பிற்கு இந்த கூலியா ? என வித்யாசமாகவும் என்னத்தொன்றுகிறது 

No comments:

Post a Comment