Saturday 24 October 2015

அடங்கப்பா ? 16 அடி நீளமா ? மலைப்பாம்பு – திண்டுக்கல் அருகே பிடிப்பட்ட மலைப்பாம்புவினால் பரபரப்பு


மழைக்காலங்கள் என்றாலும் சரி, வெயில் காலமாக இருந்தாலும் சரி ஊருக்குள் படையெடுக்கும் மலைபாம்புகள் அங்குள்ள ஆடுகள், கோழிகளை வேட்டையாடுவதுடன் சிறுவயது உடையவர்களையும் வேட்டையாடுவது வழக்கம், இந்நிலையில் ஆங்காங்கே மலைப்பாம்புகளை அப்பகுதி மக்கள் உயிருடன் பிடித்து தீயணைப்பு வீரர்களுக்கு கொடுத்து வரும் நிலையில் திண்டுக்கல் அருகே சுமார் 16 அடி நீளம் கொண்ட மலைப்பாம்புவை உயிருடன் பிடித்து பொதுமக்கள் தீயணைப்பு துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

திண்டுக்கல் அருகே ஆத்தூரிலிருந்து காமராஜர் அணைக்கு செல்லும் வழியில் ராமசாமி என்பவரது தோட்டத்து பூ வயலில் 16 அடி நீளம் 35 கிலோ எடை கொண்ட மலைப் பாம்பை  ஊர் பொதுமக்கள் பிடித்து தீயணைப்பு துறையினர் உயிருடன் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதோடு, எந்த வித சேதாரமும், இல்லையெனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். மலைப்பாம்புகளை பெற்றுக் கொண்ட தீயணைப்பு துறையினர் அந்த மலைபாம்புவை மலைப்பிரதேசத்தில் கொண்டு விட்டு விடுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment