தமிழக முதல்வரும்,
அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலாளருமான ஜெயலலிதா அவர்கள் உத்திரவுக்கிணங்க கரூர் மாவட்ட அ.தி.மு.க
அலுவலகத்தில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம்
நடைபெற்றது. கட்சியின் கரூர் நகர செயலாளர் வை.நெடுஞ்செழியன் முன்னிலை வகித்தார். கரூர்
நகர்மன்ற தலைவர் தமிழ்நாடு செல்வராஜ், கரூர் மாவட்ட ஜெ பேரவை செயலாளரும், கிருஷ்ணராயபுரம்
எம்.எல்.ஏ வுமான எஸ்.காமராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட
செயலாளர் விஜயபாஸ்கர் வரும் சட்டமன்ற தேர்தலில் நாம் அம்மாவின் செயல்திட்டங்களை அனைத்து
பொதுமக்களும் நன்கு அறிவர். இந்தியா அளவில் ஏன் உலகளவில் மாணவ, மாணவிகளின் நலனி பெரும்
அக்கறை கொண்டவர் நம் அம்மா அவர்கள் மட்டும் தான் பள்ளி படிப்பில் இருந்து கல்லூரி படிப்பு
வரை விலையில்லா காலணி, விலையில்லா ஜாமின்ரி பாக்ஸ், விலையில்லா நோட் புத்தகங்கள், விலையில்லா
சீருடைகள், விலையில்லா மடிக்கணினி என பல்வேறு திட்டங்களை அறிவித்ததோடு அதை செயல்படுத்தி
மாணவ, மாணவிகளின் நலனில் பெரும் அக்கறை கொண்டவர். உலகளவில் நம் அம்மா ஒருவரே சென்ற
மைனாரிட்டி தி.மு.க வினர் ஆட்சியில் மக்கள் பெற்ற துன்பங்கள் ஏராளம் அதையெல்லாம் நமது
அம்மா அரியணையில் ஏறிய போது கொடுத்த வாக்குறிதிகளை செய்து சாதனை புரிந்ததை உலக பத்திரிக்கைகளில்
இடம்பெற்றது என்றால் அது மிகையாகாது. இந்நிலையில் மாணவ, மாணவிகள் படித்து கல்வி பயின்று
முடித்தால் அவர்களுக்கு திருமணத்திற்கு கூட தாலிக்கு தங்கம், திருமண உதவி என பல்வேறு
திட்டங்களை ஏழை, எளியோர்களுக்கும் நம் மாநிலத்தில் வாழும் அனைவருக்கும் திட்டம் தீட்டி
வருகிறார். நமது அம்மா உணவகத்தை பார்த்து தான் டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள்
தற்போது நமது அம்மா பாணியில் உணவகங்களை குறைந்த விலையில் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு
வருகிறது. இது ஒன்று போதும் அம்மாவின் சாதனையை சொல்ல, இப்படி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி
வரும் நமது அம்மாவின் செயல்திட்டங்களை மக்களிடம் சொல்லி நமது கட்சி நல்ல பெயர் வாங்க
ஒவ்வொரு அ.தி.மு.க தொண்டனும், உழைக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில்
1 வது வார்டு முதல் 5 வது வார்டு வரை ஏராளமான கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள்
கலந்து கொண்டனர். இந்நிலையில் தமிழக அளவில் கரூர் மாவட்டத்தில் தற்போது 2016 சட்டமன்ற
தேர்தலுக்கான சுவரொட்டி எழுதும் இடத்தை பிடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எது எப்படியோ தமிழக அரசியலில் வரும் சட்டமன்ற தேர்தலில் கரூர் மாவட்ட அ.தி.மு.க முந்தியுள்ளது
என்பது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment