Tuesday, 20 October 2015

பண்டைய காலம் நடைபெற்ற உண்மை வரலாறு சிவனடியார்களை துன்பப்படுத்துவோரை எப்படி தண்டனை கொடுக்கலாம் என எறிபத்த நாயானார் புகழை போற்றும் நூதன விழா கரூரில் நடைபெற்றது. தமிழகம், பாண்டிச்சேரியில் இருந்து சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்






சிவனுக்கு தொண்டு செய்கிறவர்களுக்கு தீங்கு ஏற்பட்டால் சிவனடியார்கள் சினம் கொள்வார்கள் என்னும் வரலாற்று ஆன்மீக உண்மை சம்பவத்தை மையப்படுத்தி செயல்விளக்கத்துடன் கரூரில் நடைபெற்ற பூக்குடலை திருவிழா.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு புகழ்ச்சோழன் மன்னன் ஆட்சிகாலத்தில் 64 நாயன்மார்களில் ஒருவரான இலைமலிந்த வேல்நம்பி எறிபத்த நாயனார் வழக்கம் போல் நந்தவனத்திலிருந்து பூக்களை பறித்து கொண்டு சிவனுக்கு பூஜை செய்ய சென்ற போது புகழ்சோழன் மன்னனின் பட்டத்து யானை பூக்கள் அடங்கிய பூக்குடலையை தட்டிவிட்டதால் வெகுண்ட எறிபத்த நாயனார் மன்னனின் பட்டத்து யானை என்று கூட பார்க்காமல் கோடாரியால் யானையை வெட்டி கொன்றார்,இதை அறிந்த மன்னன் நாயன்மாரிடம் பட்டத்து யானை தவறு செய்ததற்காக தன்னையே கொல்ல வேண்டினார்.மன்னன் கூறியதை கேட்ட நாயன்மார் சிவனுக்கு தொண்டு செய்பவருக்கு இடையூறு செய்ததாலே கோபத்தில் இந்த செயலை செய்ததாகவும் சம்பவத்தின் உண்மை நிலை அறிந்த மன்னரும்,எறிபத்த நாயனாரும் இறைவனுக்கு தொடர்ந்து தொண்டாற்றிடும் முடிவில் சமாதானம் அடைந்தனர்.இந்த நிகழ்வை நினைவூட்டும் வகையில் ஆண்டு தோறும் கரூர் கல்யாணபசுபதீஸ்வரர் ஆலய வளாகத்தில் முன்பு நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வில் இரண்டு ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், சிவனடியார்கள் பூக்குடலையுடன் பங்கேற்று ஊர்வலமாக நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று இறுதியாக கோவிலை வந்தடைந்தது. இதில் ஆண் சிவனடியார்களும் பெண்சிவனடியார்களும் செண்டை மேளங்கள் முழங்கியது குறிப்பிடத்தக்கது. மேலும் இதில் தத்ரூபமாக அக்காலத்தில் நடைபெற்ற சம்பவத்தை சிவனடியார்கள் பொம்மை யானையுடன் நடித்து காட்டிய சம்பவம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

No comments:

Post a Comment