புதிய தலைமுறை தொலைக்காட்சியில் இடம் பெற்ற நேரடி நிகழ்ச்சியில், எழுத்தாளர் ஞானியிடம் “உங்களின் முகத்திலும் கரியை பூசுவோம்” என்று சிவசேனா நிர்வாகி மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதிய தலைமுறை தொலைக்காட்சியில், தினமும் இரவு 9 மணிக்கு நேர்படப் பேசு என்ற தலைப்பில் விவாத நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதில் பிரபல அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் எழுத்தாளர் ஆகியோர் கலந்து கொண்டு தங்களின் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று இரவு நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் எழுத்தாளர் ஞானி, முகத்தில் கரியை பூசும் கலாசரத்திற்கு எதிராக தன்னுடைய விவாதங்களை வைத்தார். இதனால் கோபமடைந்த சிவசேனா நிர்வாகி ராதாகிருஷ்ணன் “இந்துக்களுக்கு எதிராக யார் பேசினாலும் அவர்களின் முகத்தில் கரியைப் பூசுவோம். ஏன், உங்களின் முகத்தில் இந்த அரங்கிலேயே கரியை பூசுவோம்” என்று எச்சரிக்கும் வகையில் பேசினார். இந்த பேச்சு ஞானி உட்பட அந்த மேடையில் இருந்தவர்கள் மற்றும் நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்த பொதுமக்கள் எல்லோருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது குறித்து தனது பேஸ்புக்கில் கருத்து தெரிவித்துள்ள ஞானி “சிவசேனை பிஜேபி இதர இந்துத்துவ இயக்கப் பேச்சாளர்களுடன் டி.வி.விவாத அரங்குகளில் பங்கேற்க இனி செல்வதாயிருந்தால்,அழைக்கும் டிவி நிலையங்கள் போதுமான பாதுகாப்பு அளித்தால்தான் வர இயலும் என்று இதன்படி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில் எழுத்தாளர் ஞானி தன்னை ஒரு பத்திரிக்கையாளராக வெளிக்காண்பித்து வருவதாகவும், நடிகர் சங்க தேர்தல் போல பத்திரிக்கையாளர் சங்க தேர்தல் வர வேண்டும் என்று கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதே தொலைக்காட்சியில் கூற உடனே நீங்கள் பத்திரிக்கையாளராகவும், பத்திரிக்கையாளர் சங்க உறுப்பினராகவும் இருந்தால் இந்த கேள்வியை கேட்கலாம் என பல பத்திரிக்கையாளர்கள் வாட்ஸ் அப்பில் போட்டு காமெடி செய்து வந்தனர். மேலும் இவரது வாழ்க்கையையும், இவரது மனைவி பத்மாவிற்கும் இவருக்கும் விவாகரத்து ஆனது வரை வாட்ஸ் அப்பில் பரவி இவரை கேளிச்சித்தரமாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் எழுத்தாளர் ஞானிக்கு நேரம் சரியில்லை என மற்ற சமூக நல ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment