Thursday 29 October 2015

மு.க.ஸ்டாலினுக்கு பெருத்த அவமானம் : 'இப்படிதான் டீ குடிப்பாங்களா... இப்படிதான் விவசாயம் செய்வாங்களா?'- ஸ்டாலினை விளாசும் DYFI

ஸ்டாலினுக்கு இந்த அவமானம் தேவைதானா ? என்கிற விதத்தில் இப்படிதான் டீ குடிப்பாங்களா, இப்படி தான் விவசாயம் செய்வார்களா ? எனவும் வேற்றுக்கிரகத்திலிருந்து வந்துள்ளாரா எனவும் DYFI யினர் விவாதித்துள்ளது அ.தி.மு.க வினர், ம.தி.மு.க வினர், பா.ம.க வினர், தே.மு.தி.க என பல்வேறு கட்சியினரிடையே பெரும் உற்சாகப்படுத்தியுள்ளது
''இப்போது தான் வேற்றுகிரகத்திலிருந்து ஒருவர் வந்திருக்கிறார். இப்போதுதான் மனிதர்களையே பார்க்கிறார். இப்படிதான் டீ குடிபாங்களா... இப்படி தான் விவசாயம் செய்வாங்களா? என்று ஒவ்வொன்றையும் இப்போதுதான் அவர் பார்க்கிறார். இத்தனை நாளாய் எங்கிருந்தார்?'' என்று  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் (DYFI) திருவாரூர் மாவட்ட மாநாடு,  இரண்டு நாட்களாக நடைபெற்றது.
இறுதி நாளில் திருவாரூர் பகுதியில் DYFIயின் கலைவிழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தெற்கு வீதியில் நடைபெற்ற கலைவிழாவில் 'தேசத்தை காத்தல் செய்' எனும் தலைப்பில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் வேல்முருகன் பேசுகையில், "பாஜக ஆட்சிக்கு வந்து ஒன்றே கால் வருடம் பூர்த்தி அடைந்து விட்டது. என்ன முன்னேற்றத்தை கொண்டு வந்தார்கள். 
கருப்பு பணத்தை மீட்டுத் தருவதாக சொல்லி ஆட்சிக்கு வந்தீர்களே. கருப்பு பணம் மீட்கப்பட்டு விட்டதா? யார் யாரிடம் இருந்து அவை பெறப்பட்டது என்பதை தெரிவிக்க இயலுமா? மோடி பிரதமரானால் தமிழகத்தில் உள்ள மீனவர்கள் கொல்லப்படுவதும், சிறை பிடிக்கப்படுவதும் குறையும் என்று சொல்லி மோடியை பிரதமராக்கிய தமிழிசை, பொன்.ராதாகிருஷ்ணன் அவர்களே... இன்றைக்கு தமிழக மீனவர்கள் நிலைமை என்ன?

குழந்தை அழுதால் பால் தந்து அழுகையை நிறுத்துவது முறை.  ஆனால், குழந்தை வாயில் தேன் வாசனை நிறைந்த அடைப்பான்களை தாய் அடைப்பது என்பது செயற்கை முறை. இரண்டாவது முறையைத்தான் மோடி அரசு கடைபிடித்து வருகிறது.

சென்ற ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி முதல் அடைப்பான் வைக்கப்பட்டது. அதுதான் 'தூய்மை இந்தியா'.  ஆட்சியில் உள்ளவர்கள் முதல், நடிகர்கள் வரை அனைவரும் நன்றாக செயல்பட்டனர். கேமரா முன்னிலையில். அன்றைக்கே பாடல் எழுதப்பட்டது பாருங்கள்..."தெருத் தெருவாய் கூட்டுவது பொதுநலத் தொண்டு,  ஊரார் தெரிந்து கொள்ள படம் பிடித்தால் சுயநலம் உண்டு!'  

'தூய்மை இந்தியா' திட்டத்துக்கு எவ்வளவு தொகை ஒதுக்கப்பட்டது. இதற்கு அருகே ஒரு மேடை போடுங்கள். இது தொடர்பாக யாரிடம் வேண்டுமானாலும் நான் விவாதிக்க தயார். 'தூய்மை இந்தியா' திட்டம் செயல்படுத்தப்பட்டு இவ்வளவு நாள் ஆன பின்னர்,  நான் திருவாரூர் வந்திறங்கிய போது, துபாய் பற்றி வடிவேலு சொன்னதைப் போன்று சாலையில் சாதத்தை போட்டு சாப்பிடும் அளவிற்கு வந்திருக்க வேண்டும் அல்லவா...என்ன ஆயிற்று? 

இப்போது இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டு இருக்கிறார்களே? 'குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று' என்று சொல்லியிருப்பது நம்முடையவர்கள் தானே.

இரண்டாவது அடைப்பான் 'திறன் மிக்க இந்தியா', மூன்றாவது 'யோகா'. உனக்கு வேலை கிடைக்கவில்லையா  யோகா செய், உனக்கு வறுமையா யோகா செய் என்று சொல்லும் யோகாதான் மூன்றாவது அடைப்பான். யோகாகுரு பாபா ராம்தேவ், நல்லெண்ண தூதுவர். சந்நியாசி என்றால் எப்படி இருக்க வேண்டும்? கிடப்பதை வைத்துதான் வாழ்வு நடத்த வேண்டும். ஆனால், இவர்களுக்கு ஆயிரம் கோடிக்கு மேலாக சொத்து இருக்கிறது. இதில் காவல்துறையின் இசட் பிரிவு பாதுகாப்பு வேறு. மாதம் ஆறு லட்சம் ரூபாய் அவர் பாதுகாப்புக்கு மட்டுமே செலவழிக்கப்படுவதுதான் கொடுமையானது.
 
அடுத்த அடைப்பான் 'டிஜிட்டல் இந்தியா'. உலகின் இரண்டாவது அதிகபட்ச விவசாய நிலம் இந்தியாவில் இருக்கிறது. அடிப்படையை விட்டு விட்டு அத்தியாவசத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். பருப்பு விலை இதற்கு ஒரு சாட்சி.

இப்போதுதான் வேற்றுகிரகத்திலிருந்து ஒருவர் வந்திருக்கிறார். அவர் இப்போதுதான் மனிதர்களையே பார்க்கிறார். 'இப்படிதான் டீ குடிப்பாங்களா... இப்படிதான் வண்டி ஓட்டுவாங்களா... இப்படிதான் விவசாயம் செய்வாங்களா?' என்று ஒவ்வொன்றையும் இப்போதுதான் அவர் பார்க்கிறார். இத்தனை நாளாய் எங்கிருந்தார்? இப்போதுதான் மக்களை பார்க்க வேண்டும் என்று தோன்றியதோ? சென்ற ஆட்சியில் துணை முதல்வர் பொறுப்பு வகித்தபோது என்ன செய்து கொண்டிருந்தார்?
இத்தகைய ஆட்சியாளர்கள் ஆண்டு வரக் கூடிய இந்த தேசத்தை காப்பது நம்முடைய எண்ணமாக உள்ளது.  நம்முடைய வேலையை சரியாக செய்வதுதான் இதன் முதல் வெற்றியாக இருக்கும். அதற்கு உங்கள் ஒத்துழைப்பை நாடுகிறோம்" என்று பேசினார். எது எப்படியோ இந்த செய்தியானது தி.மு.க வினர் மத்தியில் மட்டுமில்லாமல், பா.ம.க வினர் மத்தியிலும், ம.தி.மு.க வினர் மத்தியிலும், அ.தி.மு.க வினர் மத்தியிலும் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment