அ.தி.மு.க.வின் 44-ஆவது ஆண்டு தொடக்க நாளை முன்னிட்டு இன்று அ.தி.மு.க.பொதுச் செயலாளர் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நீலகிரி மாவட்டம், கோத்தகிரி பேரூராட்சி, டானிங்டனில் நிறுவப்பட்டுள்ள கழக நிறுவனத் தலைவர், எம்.ஜி.ஆர். திருவுருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த படத் திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அ.தி.மு.க. கொடியினை ஏற்றி வைத்து, ‘தொடக்க நாள் விழா சிறப்பு மலரை’ வெளியிட்டார்.
முதல் பிரதியை அமைச்சர் உதயகுமார் பெற்றுக் கொண்டார். பின்னர், அங்கு குழு மியிருந்த நிர்வாகிகள்; தொண்டர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு இனிப்பு வழங்கினார்.
அ.தி.மு.க.வின் 44-வது ஆண்டு தொடக்க நாளை முன்னிட்டு நீலகிரி மாவட் டம், கோத்தகிரி பேரூராட்சி, டானிங்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள் வதற்காக வருகை தந்த பொதுச் செயலாளர், முதல்- அமைச்சர் ஜெயலலிதாவை வரவேற்கும் விதமாக, பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.
சாலையின் இரு மருங்கி லும் கழகக் கொடித் தோர ணங்கள்; வாழை மரங்கள் கட்டப்பட்டு, வரவேற்புப் பதாகைகள் வரவேற்பு வளைவுகள் அமைக்கப்பட்டு, நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த படுகர், தோடர், கோத்தர் இன மக்கள் தங்களுக்கே உரித்தான நடனங்களை ஆடி வரவேற்றனர்.
பல இடங்களில் மேள தாளங்கள், செண்டை மேளம், பேண்டு வாத்தியம், தாரை தப்பட்டை மற்றும் கிராமிய இசைக் கருவிகள் முழங்க, கழக உடன்பிறப்புகள் கழகக் கொடிகளையும், ஜெயலலிதாவின் உருவம் தாங்கிய பதாகைகளையும் தங்கள் கைகளில் ஏந்திய வண்ணம் மகிழ்ச்சி பொங்க வரவேற்றனர்.
வயது முதிர்ந்தவர்களும், ஆண்களும், பெண்களும், குழந்தைகளுமாக ஆங் காங்கே பொதுமக்கள் பெருந் திரளாகத் திரண்டிருந்து, ஜெயலலிதாவை நேரில் கண்டு பரவசத்துடன் வர வேற்றனர்.
நிகழ்ச்சியில், தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சர் கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழகம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்க ளின் பிரதிநிதிகளும், தொண்டர்களும், பொதுமக்களும் பெருந்தி ரளான அளவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இன்றைய நிகழ்ச்சியின் காரணமாக நீலகிரி மாவட்டமே விழாக் கோலம் பூண்டிருந்தது.
No comments:
Post a Comment