நாகப்பட்டினம் தாமரைகுளம் தடுப்பு சுவர் இன்று காலை இடிந்து விழுந்தது. இது சுமார் 2 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டது. இந்த குளம் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைப்பற்காக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நாகப்பட்டினம் நகரத்தின் மையத்தில் இருக்கும் தாமரைக்குளத்தை அழகுபடுத்தும் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விரைவில் வரவிருந்தது. 2 கோடி மதிப்பீட்டில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபால் இந்த அழகுபடுத்தும் பணிகளை தொடங்கிவைத்தார். முன்னாள் கலெக்டர் முனுசாமி, தற்போதைய கலெக்டர் பழனிசாமி மேற்பார்வையில் இப்பணிகள் நடந்து வந்தன. முதல்வர் ஜெயலலிதா இந்த குளத்தை திறந்துவைப்பதாக இருந்தது. இந்நிலையில் தாமரைக்குளத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
No comments:
Post a Comment