Wednesday, 25 November 2015

10 புல், 26 குவார்ட்டரு, 3 பீர், ஊறுகாய்க்காக ரூ 200 பணம் கொள்ளையடித்து சென்ற நூதன திருடர்கள் – கரூர் அருகே பரபரப்பு



கரூர் அருகே உள்ள மேலப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தின் எதிரே டாஸ்மாக் ஒயின்ஷாப் ஒன்று செயல்பட்டு வந்தது. இந்நிலையில் கடையை கடைப்பாறை கொண்டு சட்டரை நெம்பி பின்னர் திறந்து திருடனோ அல்லது திருடர்களோ டாஸ்மாக்கை திருடி உள்ளனர். இந்த நூதன திருட்டு என்ன சம்பவத்தை காட்டுகிறது. மேலும் இந்த திருட்டு சம்பவத்தில் 10 மதுபானங்கள் புல்கள், 26 குவார்ட்டர்கள், 10 பீர்கள் என்றால் ஒரு நாளைக்கு இது போதும் என்று போலும் இந்த சரக்குக்கு ஊறுகாய்க்கென ரூ 200 போதும் என கள்ளாபொட்டியில் இருந்து பணத்தை எடுத்து சென்றது குறிப்பிடத்தக்க காமெடியை காட்டுகிறது. மேலும் ஒரு புறம் திருட வந்த இடத்தில் பணம் எதுவும் இல்லை அதலால் குடித்தே விரக்தியில் போவோம் என இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. எது எப்படியோ திருட்டு திருட்டு தான் என பசுபதிபாளையம் போலீஸார் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அரசின் டாஸ்மாக் கதவு மிகவும் சேதமடைந்துள்ளது பார்த்தால் ஒரு நபரே இந்த கடுஞ்செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்ற தோரணையும் தெரிகிறது. அந்த அளவு பாதுகாப்பில் பலவீனமாக அக்கதவு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இச்சம்பவம் இப்பகுதியில் மட்டுமல்லாமல், டாஸ்மாக் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டாஸ்மாக் மாவட்ட மேலாளர் பாண்டி மற்றும் அலுவலர்களும் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment