Saturday, 14 November 2015

என்னங்க கரூருக்கா போறீங்க ? அங்கங்க பள்ளம் விழுதாம்மா ? பார்த்து போங்க ? காண்டராக்டர் கோளாறினால் கதறும் குடும்ப பெண்கள் – கணவருக்கு சொல்லும் அட்வைஸ்






கரூரில் அடுத்தடுத்து ஏற்படும் திடீர் பள்ளத்தினால் பெரும் பரபரப்பு – பூகம்பமா ? அச்சத்தில் பொது மக்கள் தற்போது தவித்து வருகின்றனர். மேலும் என்னங்க கரூருக்கா போறீங்க ? அங்கங்க பள்ளம் விழுதாம்மா ? பார்த்து போங்க ? காண்டராக்டர் கோளாறினால் கதறும் குடும்ப பெண்கள் – கணவருக்கு சொல்லும் அட்வைஸ் முறையில் நக்கலடித்து வருகின்றனர்.

கரூர் என்றால் தமிழகத்தின் மைய மாவட்டம், வணிகம், ஆன்மீகம், புராதானம் மிக்க மாவட்டம் என்ற பெயர் மட்டும் தான் இதுவரை இருந்து வந்தது. ஆனால் தற்போது கரூர் என்றால் திடீர் பள்ளம் விழும் ஊர் எனப்பெயர் பெற்றுள்ளது. கரூர் நகராட்சிக்குட்பட்ட இராஜாஜி நகர் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் (05-11-15), இரவு கொட்டும் மழையில் திடீர் பள்ளம் ஏற்பட்டது. சுமார் 10 அடி அளவில் ஏற்பட்ட பள்ளம் நேரம் செல்ல செல்ல, திடீரென பெரும் பள்ளமாக மாறியது. இதையடுத்து கரூர் மாவட்ட ஆட்சியர் ஜெயந்தி மற்றும் கரூர் நகராட்சி தலைவர் செல்வராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்நிலையில் அங்கு ராட்சித இயந்திரங்கள் கொண்டு முற்றிலும் பள்ளத்தை தோண்டி 3 லோடு மண் அடித்து, அன்று மாலைக்குள்ளே சரிசெய்யப்பட்டது. இந்நிலையில் அடுத்த நாளே (06-11-15) அதே இடத்தில் மீண்டும் பள்ளம் ஏற்பட்டது. இதையும் மாவட்ட ஆட்சியர் ஜெயந்தி பார்வையிட்டார். பின்னர் அதிகாரிகளுக்கு அறிவுரை கூறி உடனே என்ன செய்யலாம் என யோசித்து சீக்கிரம் நடவடிக்கை எடுத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர உத்திரவிட்டார். இதையடுத்து அடுத்த நாளும் 1 லோடு மண்ணை லாரியில் அடித்து அப்பள்ளத்தை மீண்டும் சரி செய்தனர். இந்நிலையில் அதே பகுதியில் அருகே உள்ள இரத்தினம் சாலையிலும், அதே போல திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில் கரூரில் பூகம்பமா ? புயலா என அச்சத்தில் அப்பகுதி மக்கள் ஆழ்ந்துள்ளனர். இந்த சம்பவத்தை அறிந்த மக்களவை துணை சபாநாயகர் மு.தம்பித்துரையும், முன்னாள் தமிழக போக்குவரத்து துறை அமைச்சரும், கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி இருந்தும் ஏன் மொளனம் காக்கின்றனர் என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டாகும், மேலும் சாதாரண பாதாள சாக்கடை விஷயத்திலே இந்த மாதிரி அடிக்கடி குழி விழுவது கரிசல் மண் இருக்கும் இடத்தில் ஏறாவது வேலை செய்வார்களா என அப்பாவி பொதுமக்கள் கேள்வி எழுப்பியதோடு, தற்போது கட்டப்பட்டு வரும் பசுபதிபாளையம் மேல் மட்ட பாலம் குறித்து தங்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது எனவும் ஏற்கனவே போடப்பட்டுள்ள மேம்பாலங்கள் குறித்தும் தீவிர விசாரணை நடத்த வேண்டுமெனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எது எப்படியோ வீட்டை விட்டு வேலைக்கு கிளம்பும் கணவர்களை தற்போது மனைவிகள் என்னங்க கரூர் நகராட்சி ரோட்டில் போடப்பட்ட ரோட்டிலா போறிங்க என்று நக்கலாக பேசும் அவல நிலைக்கு கரூர் நகராட்சி தள்ளப்பட்டுள்ளது. கடந்த தி.மு.க ஆட்சியில் தற்போதைய எம்.எல்.ஏ வும் அப்போதைய மாவட்ட செயலாளருமான செந்தில் பாலாஜி அதே குழி விழுந்த இடத்தின் அருகே உள்ள இரட்டை வாய்க்கால் பகுதிக்காக மக்களை திரட்டி போராட்டம் நடத்திய அதே செந்தில் பாலாஜி தற்போது மாவட்ட செயலாளர் பதவியை பறிகொடுத்தும், கரூர் எம்.எல்.ஏ வாக இருந்தும் என்ன செய்ய போகிறார் என்பது தெரியவில்லை என்பது ஒரு புறம் இருக்க, எதிர்கட்சியான தி.மு.க மூச் கூட காட்டவில்லை என்பது ஏனோ ? பொறுத்து தான் பார்க்க வேண்டும் என்கின்றனர். மற்ற அரசியல் கட்சியினர். ஆகவே குழப்பத்தில் கரூர் நகராட்சிக்குட்பட்ட மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment