Wednesday 18 November 2015

சுனாமி – தானே புயல் வந்த பிறகும் இயற்கை சீற்றத்தை எதிர்கொள்ள ஆண்ட தி.மு.க அரசும், ஆளுகின்ற அ.தி.மு.க அரசும் உரிய பாடம் கற்றுக் கொள்ளவில்லை – பீகாரில் மகா கூட்டணி வென்றது போல தமிழகத்தில் பா.ம.க தலைமையில் மெகா கூட்டணி வெற்றி பெறும் – கரூரில் கூட்டணி பெயரை அறிவித்த பா.ம.க நிறுவனர் மருத்துவர் இராமதாசு




கரூரில் பா.ம.க நிறுவனர் மருத்துவர் இராமதாசு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது., அவர் பேசியதாவதுதென் மேற்கு பருவமழை நமக்கு கை கொடுக்க வில்லை என்றாலும், வடகிழக்கு பருவ மழையானது நமக்கு கூடுதலாகவே கை கொடுத்துள்ளது. காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை மாவட்டங்கள் இந்த மழை கை கொடுத்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். தற்போது இப்பணிகள் ஆமை வேகத்தில் நிவாரணம் நடைபெற்று வருகிறது என குற்றம் சாட்டினார். மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தை தமிழகத்தில் நிரந்தரமாக அமைக்க வேண்டும் என்றார். சென்னை மாநகரம் வெள்ளத்தில் நினைந்ததா ? வெள்ளத்தில் மூழ்கியதா ? எனவும் கேள்வியெழுப்பினார். சுனாமி, தானே புயல்களில் பாதிகப்பட்டும், அரசு இன்னும் பாடம் கற்றுக் கொள்ளவில்லை. வெள்ள நிவாரணம் பகுதிகளில் மீட்கபட்ட பகுதி மக்களுக்கு உணவு, உள்ளிட்ட வசதிகளை அரசு முழுமையாக செய்து தரவில்லை. மழை வெள்ளத்தினால் பாதிகப்பட்ட மக்களை அவரவர் வீடுகளில் குடியமர்த்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலூர் மாவட்டத்தில் மட்டும் மழை மற்றும் வெள்ள சேதம் ரூ ஆயிரம் கோடியை தாண்டும் என்றார். தமிழக அரசுக்கு பா.ம.க சார்பில் ஒரு ஆலோசனை, என்னவெனில் சென்னை மாநகரத்தில் உள்ள 200 வட்டங்களில் அம்மா வாட்டர், அம்மா உணவகம் போல அம்மா படகு என புதிய திட்டத்தை ஆரம்பித்து சென்னை வாழ் பகுதி மக்களை வெள்ள நீரில் இருந்து காப்பாற்ற முன் வரவேண்டும், அப்படகில் அம்மா படகு என்றும் எழுத வேண்டும் என்றார். 2004 ம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமி, 2011 ல் டிசம்பர் மாதம் கடைசியில் தாக்கிய தானே புயல், என இரண்டு இயற்கை சீர்பாடுகளையும்,  இதுவரை தமிழகத்தில் ஆண்ட தி.மு.க மற்றும் அ.தி.மு.க கட்சிகள் பாடம் கற்றுக் கொள்ள வில்லை என்றார். ஆதலால் தான் பேரிடர் மேலாண்மை இந்திய அளவில் தமிழகம் பின் தங்கியுள்ளது. சுனாமியை தொடர்ந்து 2015 ம் ஆண்டு டிசம்பர் மாதம் பேரிடர் மேலாண்மை ஏற்படுத்தப்பட்டது. அப்போது மாநில அளவில் பேரிடர் மேலாண்மை ஆணையம் அமைக்க மத்திய அரசை கேட்டுக் கொண்டது. ஆனால் இது வரை தமிழகத்தில் மாநில பேரிடர் மேலாண்மை நியமிக்க வில்லை. இந்த பருவ மழைக்கு பின்னராவது தமிழகத்தில் மாநில அளவிலான பேரிடர் மேலாண்மை அமைக்க வேண்டும். அதில் தமிழக முதல்வரை தலைவராகவும், துணை தலைவராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியை நியமிக்க வேண்டும். இந்த பேரிடர் மேலாண்மையானது மாவட்ட அளவில் ஏற்படுத்தப்பட்டு, இந்த ஆணையத்திற்கு அலுவலகங்களும் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றார். மேலும் புயல், மழை சீற்றக் காலங்களில் மாநில அரசின் தயவை ஏதிர்பார்க்காமல் அவர்களே சரி செய்வார்கள். முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பார்கள். தமிழகத்தில் மழை காரணமாக காய்கறி விலை பல மடங்கு உயர்ந்துள்ளாது. 15 தினங்களுக்கு முன்னர் விற்கப்பட்ட காய்கறி தற்போது பல மடங்கு உயர்ந்துள்ளது. வாழைகள் அதிகமாக சாய்ந்துள்ளதால் வாழைக்காய்கள் விலை மட்டும் சரிந்துள்ளது. சென்னையில் காய்கறி விலையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர பசுமை பண்ணைத்திட்டத்தை தமிழக முதலவர் ஜெயலலிதா சென்னைக்கு மட்டும் அறிவித்துள்ளதாக குற்றம் கூறிய பா.ம.க நிறுவனர் இராமதாசு அந்த பசுமை பண்ணைத்திட்டத்தை தமிழக அளவில் இந்த திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்றார். மணல் கொள்ளையில் தமிழக அளவில் முதல் மாவட்டமாக கரூர் மாவட்டம் உள்ளது. இம்மாவட்டத்தில் ஓடும் அமராவதி, காவிரி ஆறுகளில் மணல் கொள்ளை இன்றும் நீடிக்கிறது என்றார். முந்தைய தி.மு.க ஆட்சியில் நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் மணல் லாரிகள் ஒடின. ஆனால் அரசிடம் 900 லாரிகள் மட்டும் தான் கணக்கு காண்பிக்கப்பட்டன. இது குறித்து தற்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த தி.மு.க ஆட்சியை கண்டித்து 2010 ம் வருடம் நவம்பர் மாதம் 7 ம் தேதி இது குறித்து அறிக்கையும் விட்டார். மேலும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அ.தி.மு.க ஆட்சியில் மணல் கொள்ளைக்கு முடிவு கட்டப்பட்டு மணல் கொள்ளை நிறுத்தப்படும் என்றார். ஆனால் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு தற்போதும் மணல் கொள்ளை தொடர்கிறது. அ.தி.மு.க, தி.மு.க ஆகிய இரு கட்சிகளும் ஆண்டுக்கு ரூ 30 ஆயிரம் கோடி அளவுக்கு ஆற்று மணலை கொள்ளையடித்து விட்டு அரசுக்கு வெறும் 150 லிருந்து 190 கோடி மட்டுமே அரசுக்கு கணக்கு காட்டுகிறது. இது குறித்து உரிய நீதி விசாரணை வேண்டும்,. சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என ஏற்கனவே குரல் கொடுத்துள்ளோம். இறுதியாக பேசிய பா.ம.க நிறுவனர் மருத்துவர் இராமதாசு பீகாரில் எப்படி மகா கூட்டணி வெற்றி பெற்றதோ, அதே போல தமிழகத்தில் எங்கள் தலைமையிலான மெகா கூட்டணி வெற்றி பெறும் என்றார். பேட்டியின் போது மாநில தலைவர் கோ.க.மணி. மாநில துணை பொதுச் செயலாளர் பி.எம்.கே.பாஸ்கரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment