Saturday 21 November 2015

மழை நீர் சேகரித்து வைத்த கடைகாரர்களுக்கு அபராதம்; நகராட்சி ஆணையாளர் - மழைநீரினால் கொசுக்கள் பரவும் அல்லவா ? புதுமுறை அட்வைஸ்



தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் தமிழகத்தில் வட கடலோர மாவட்டங்களில் மட்டும் பலத்த பாதிப்பை ஏற்படுத்தியது. மேலும் தமிழகத்தின் தெற்கு மாவட்டங்களான ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தற்போது மழையின் தாக்கம் அதிகரித்துள்ளது.
ஈரோடு மாவட்டம், பவானி நகராட்சி ஆணையர் சிவகுமார், துப்புரவு அலுவலர் சோழராஜா, துப்புரவு ஆய்வாளர் சிவகுமார் மற்றும் ஊழியர்கள் வெள்ளிக்கிழமையன்று நகராட்சி பகுதியில் திடீர் சோதனை நடத்தினர். 21-வது வார்டு, பழனியாண்டவர் கோயில் அருகே, பழைய இரும்புக் கடையில் நடத்தப்பட்ட சோதனையில் அங்கு திறந்த வெளியில், பழைய பாத்திரங்களில் மழை நீர் தேங்கியிருந்தது தெரியவந்தது.

மேலும், அந்தத் தண்ணீரில் கொசுப் புழுக்கள் வளர்ந்த நிலையில் இருந்ததைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, தண்ணீர் வெளியேற்றப்பட்டு, சுற்றுப்புறப் பகுதிகளில் கொசு மருந்து தெளித்து, தீவிர சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
 
மேலும், பழைய இரும்புக் கடை உரிமையாளருக்கு ரூ. 2,500 அபராதமும் விதிக்கப்பட்டது. இதேபோல, காமராஜர் நகரில் அதிக அளவில் மழை நீரைத் தேக்கி வைத்த ஒரு பழைய இரும்புக் கடை உரிமையாளருக்கும் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

No comments:

Post a Comment