சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி ஏரிக்கு அதிக அளவு தண்ணீர் வந்ததால் கடந்த 5 நாட்களுக்கு முன்பு 18 ஆயிரம் கனஅடி திறக்கப்பட்டது. இதனால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
தற்போது ஏரிக்கு மழை நீர் வரத்து குறைந்து வருவதால் படிப்படியாக தண்ணீர் திறப்பதும் குறைக்கப்பட்டுள்ளது. ஏரிக்கு நேற்று 6820 கன அடி தண்ணீர் வந்ததால் 7020 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இன்று 4044 கன அடி தண்ணீர் வருவதால் 3836 கன அடியாக தண்ணீர் திறப்பது குறைக்கப்பட்டுள்ளது. இதனால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் குறைந்து விட்டது.
செம்பரம்பாக்கம் ஏரியில் கடந்த 1 வாரத்துக்கு முன்பு 18 ஆயிரம் கன அடி திறக்கப்பட்டதால் அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்தது.
தற்போது ஏரிக்கு தண்ணீர் வருவது வெகுவாக குறைந்து விட்டது. நேற்று 2178 கனஅடி தண்ணீர் வந்ததால் 2 ஆயிரம் கனஅடி மட்டுமே அடையாறு ஆற்றில் திறந்து விடப்பட்டிருந்தது.
ஏரிக்கு இன்று 1460 கனஅடி தண்ணீர் வந்ததால் 1500 கனஅடி தண்ணீர் அடையாறு ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
இதனால் அடையாறு, கொசஸ்தலை ஆற்றில் வெள்ள அபாயம் நீங்கியது.
புழல் ஏரி நிரம்பாத நிலையில் ஏரிக்கு 2211 கனஅடி தண்ணீர் வருவதால் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை.
No comments:
Post a Comment