Tuesday 24 November 2015

வெள்ள நிவாரண நிதி முதற்கட்டமாக 10 ஆயிரம் கோடி வழங்க வேண்டும்: நடிகர் சரத்குமார் கோரிக்கை


சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
வடகிழக்கு பருவ மழையால் கடலூர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ 4 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஏறத்தாழ 170 பேர் இறந்துள்ளனர்.
தமிழக அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை விரைந்து வழங்குவதற்கும், சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கும் ஏற்றவாறு மத்திய அரசு முதற்கட்டமாக ரூபாய் 10,000 கோடியை உடனடியாக வழங்க வேண்டும்.
வெள்ள நிவாரண பணிகளை அரசியல் நோக்கத் தோடு பார்க்காமல் அனைத்து அரசியல் இயக்கங்களும் மற்றும் பொது சேவை இயக்கங்களும் பாதிப்புக்குள்ளான மக்களை கண்டறிந்து நிவாரணம் கிடைக்க உழைக்க வேண்டும். 
இன்றும் நாளையும் திருநெல்வேலி மாவட்டத்திலும், தூத்துக்குடி மாவட்டத்திலும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட இருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment