Tuesday 24 November 2015

இந்திய பிரதமர் மோடி சிங்கப்பூரில் ஜனாதிபதியை சந்தித்தார்


மலேசிய சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி சிங்கப்பூர் சென்றார்.
பிரதமர் நரேந்திரமோடி 3 நாள் சுற்றுப்பயணமாக மலேசியா சென்றார். அங்கு நடைபெற்ற ‘ஆசியான்’ உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார்.
அங்கு பிரதமர் நஜீப் மற்றும் தொழில் அதிபர்களை சந்தித்தார். மலேசிய வாழ் இந்தியர்களின் வரவேற்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
மலேசியாவில் 3 நாட்கள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று மாலை சிங்கப்பூர் வந்தார். அங்கு விமான நிலையத்தில் அவருக்கு அதிகாரிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
அதை தொடர்ந்து இந்தியர்கள் அதிகம் வாழும் லிட்டில் இந்தியா பகுதிக்கு சென்றார். அங்கு நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அதில் சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லுங் தனது மனைவி ஹோ சிங்குடன் கலந்து கொண்டார்.
விழா முடிந்ததும் இந்திய விடுதிக்கு சென்று அவர்கள் உணவு சாப்பிட்டனர். அப்போது சிங்கப்பூர் பிரதமர் லீ அவரது மனைவி ஹோ சிங் ஆகியோருடன் பிரதமர் மோடி செல்பி எடுத்துக் கொண்டார்.
இன்று சிங்கப்பூர் ஜனாதிபதி டோனி தான் கெங்குயம்மை அவரது மாளிகையில் சந்தித்தார். முன்னதாக பிரதமர் மோடிக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இன்று பிரதமர் லீசியென் லூங் மற்றும் தலைவர்களை முறைப்படி சந்தித்து பேசுகிறார். அதை தொடர்ந்து இந்திய தேசிய ராணுவ வீரர்கள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார். இந்தியா– சிங்கப்பூர் பொருளாதார மாநாட்டில் பங்கேற்று சிறப்புரை ஆற்றுகிறார்.
இன்று மாலை சிங்கப்பூர் தொழில் அதிபர்களை சந்தித்து இந்தியாவில் தொழில் தொடங்கவும், முதலீடு செய்யவும் வருமாறு அழைப்பு விடுக்கிறார். அதன்பின்னர் சிங்கப்பூரில் வாழும் இந்தியர்கள் அளிக்கும் வரவேற்பில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். இரவில் நாடு திரும்புகிறார்.

No comments:

Post a Comment