Sunday 22 November 2015

கரூர் அருகே ராஜ வாய்க்காலில் ஆகாயத்தாமரை; பொதுப்பணித்துறையின் அவல நிலையால் தண்ணீர் திறப்பதில் சிக்கல்





கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தொகுதிக்குட்பட்ட மாயனூர் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் இருந்து தண்ணீரை கதவணை மூலமாக கட்டளை இராஜ வாய்க்கால் மூலமாகவும், கிளை வாய்க்கால்கள் என மொத்தம் 3 வாய்க்கால்களும், அதில் இருந்து பிரிவு வாய்க்கால்கள் இரண்டு வாய்க்கால்களும் பிரிந்து திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு விவசாய சாகுபடிக்காக செல்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் தொடர்மழையால் ஆங்காங்கே தண்ணீர் தேக்கப்பட்டு, சேமிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த தண்ணீர் மாயனூர் கதவணையில் பிரியும் கட்டளை இராஜ வாய்க்காலில் சேர்த்து வைப்பதினால், ஆங்காங்கே ஆகாயத்தாமரை எனப்படும் தாவரங்கள் புதர் போல மண்டிக்கிடக்கிறது. மேலும் இந்த பருவ மழைக்கு பிறகு வாய்க்காலின் மதகுகளை திறக்கும் போது பிரச்சினை நிலவும் எனவும், ஆகவே மதகுகளை திறப்பதற்கு முன்னதாகவே மாயனூர் பகுதியில் புதர் போல மண்டிக்கிடக்கும் ஆகாயத்தாமரைகளை அகற்றினால் மட்டுமே தூய குடிநீர் பருகுவதற்கும், பாசனத்திற்கும் கிடைக்கும் என்பது பொது நல ஆர்வலர்களின் கோரிக்கையாகும். எது எப்படியோ தண்ணீர் திறக்கும் போது பொதுப்பணித்துறைக்கு பிரச்சினை தான் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

இந்த தொடர்மழை தங்களுக்கு எவ்வளவு பயனுள்ளது என்பதை இந்த ஆகாயத்தாமரை அகற்றும் பணியில் தான் விவசாய சாகுபடி படி தண்ணீர் வருவதையடுத்து  அமையவுள்ளதாகவும் இப்பகுதி விவசாயிகளும் கருத்து தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment