Friday 13 November 2015

நீரில் மிதக்கும் சென்னை நிவாரண பணிகள் குறித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆலோசனை


தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் பல்வேறு பகுதிகளில் தண்ணீரில் மிதக்கின்றன.வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும்  மேற்கொள்ள வேண்டிய நிவாரண பணிகள் குறித்தும் முதல்- அமைச்சர் ஜெயலலிதா இன்று சென்னை தலைமைச் செயலத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. சென்னை நகரில் நள்ளிரவு முதல் விடிய விடிய தொடர்ந்து பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. இதனிடையே தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழையால் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய நிவாரணப்பணிகளை அமைச்சர்களுக்கு முதல்-அமைச்சர்  அறிவுறுத்தியுள்ளார். நிவாரணம் அறிவிப்பு இதனிடையே தமிழகத்தில் பெய்து வரும் வடகிழக்குப் பருவமழையில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு தமிழக முதல்வர் நிவாரண நிதி அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment