Saturday, 21 November 2015

கரூரில் கதண்டுகள் அட்டகாசம் – கூடுகள் களைந்து கதண்டுகள் கொத்தியதில் தோட்டத்தில் வேலை செய்த கூலி தொழிலாளிகள் 9 பேர் மயக்கம் - அரசு மருத்துவமனையில் அனுமதி



கரூர் அருகே கதண்டுகள் தொடர்ந்து அட்டகாசம் செய்வதோடு கழுகுகள்  பறந்ததையடுத்து கூடுகள் களைந்து கதண்டுகள் கொத்தியதில் தோட்டத்தில் வேலை செய்த கூலி தொழிலாளிகள் 9 பேர் மயக்கம் - அரசு மருத்துவமனையில் அனுமதி பெற்று சிகிச்சை பெற்று வரும் சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் அருகே சின்னமநாயக்கன் பட்டியில் முருகன் என்பவரது தோட்டத்தில் கம்பி வேலி அமைக்கும் பணியில் கூலி தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். அப்போது அருகில் உள்ள தென்னை மரத்தில் கூடு கட்டி இருந்த கதண்டு எனப்படும் விஷ வண்டுகள் தங்கி இருந்த இடத்தில் கழுகு பறவை உட்கார்ந்திருந்து பிறகு அக்கழுகு பறக்கையில் பறவையின் அந்த காற்றினால் விஷ வண்டுகள் கூடு கலைக்கப்பட்டு அதிலிருந்து கதண்டுகள் எனப்படும் விஷ வண்டுகள் கலைந்து கீழே வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் ராஜி, வேல்ராஜ், முருகன், விஜயன், மாலுச்சாமி உள்ளிட்ட 9 பேர் சம்பவ இடத்திலேயே தாக்கியதில் சம்பவ இடத்திலேயே மயக்க மடைந்தனர். இந்நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக கரூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஏற்கனவே இதே போல இரங்கநாதன் பேட்டை, நெரூர் பகுதிகளிலும் இந்த கதண்டுகள் அட்டகாசத்தினால் பெரும் சிக்கலில் அப்பகுதி மக்கள் மாட்டியுள்ளதோடு, பயந்து பயந்து அதாவது கதண்டிற்கு பயந்து பயந்து தொழில் செய்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கரூரில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு பணியினர் உடனே இந்த நிலையை சீர் செய்ய மக்களுடன் இணைந்து செயல்பட பொதுநல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment