Monday 23 November 2015

8 ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கோட்டை கட்டி ஆட்சி புரிந்த கொங்கு தேச மாமன்னர் வெஞ்சமனுக்கு மணி மண்டபம், திருவுருவச்சிலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை




கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுக்காவிற்குட்பட்ட வெஞ்சமாங்கூடலூர் பகுதி விகிர்தீஸ்வரர் திருக்கோயில் அருகே அப்பகுதியை ஆண்ட அரசரும், புகழ் பெற்ற 8 ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கோட்டை கட்டி ஆட்சி புரிந்த கொங்கு தேச மாமன்னர் வெஞ்சமனுக்கு மணி மண்டபம், திருவுருவச்சிலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சியுடன் தொடங்கியது. கொங்கு தேச மாமன்னர் வெஞ்சமன் அறக்கட்டளை சார்பாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அச்சமூகத்தினரும், ஊர் பொதுமக்களும் ஏராளமானோர் கலந்து கொண்டு பூமி பூஜையில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் இந்நிகழ்ச்சி குறித்து செய்தியாளர்களுக்கு கூறிய வெஞ்சமாங்கூடலூர் அந்த காலத்தில் பெரும் பகுதியாக திகழ்ந்ததால் வெஞ்சமன் என்ற பெயரை இந்த ஊருக்கே சூட்டினார். அரசுக்கு பல முறை மணிமண்டபம் மற்றும் திருவுருவச்சிலை அமைக்க கோரிக்கைகள் தங்கள் சமூகத்தின் சார்பிலும், பொதுமக்களும் சார்பிலும் வைக்கப்பட்டது. இருப்பினும் அரசு கண்டுகொள்ளாத நிலையில் நாங்களே, அதாவது எங்கள் சமூகத்தினரும், பொதுமக்கள் சேர்ந்து இம்முயற்சியை நாங்கள் எடுத்துள்ளதாகவும், தெரிவித்தார். இது போன்ற செயல்களினால் தமிழர்களின் பாரம்பரியத்தை பறைச்சாட்டும் என அரசு உணர வேண்டும், வரும் 2016 ல் ஜனவரி 31 ம் தேதி இந்த மணிமண்டபமும், திருவுருவச்சிலையும் திறக்கப்படும்  எனவும் இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளதாகவும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment