Saturday 14 November 2015

தமிழகத்தில் 3 நாட்கள் மிகவும் பலத்த மழை எச்சரிக்கையடுத்து - முன் எச்சரிக்கை நடவடிக்கைக்கு ஜெயலலிதா உத்தரவு



முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தற்போது,  இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் எதிர்வரும்  15,16 மற்றும் 17 ஆம் தேதிகளில் தமிழகத்தில் வட  கடலோர மாவட்டங்களிலும், வட உள் மாவட்டங்களிலும் மிக அதிகளவு மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.  இதர கடலோர மாவட்டங்களிலும் பெருமழை பெய்யக்கூடும். தேவையான முன்னெச் சரிக்கை மற்றும் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்கும் வகையில்  இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளை பல்வேறு மாவட்டங்களுக்கு நான் அனுப்பிட உத்தர விட்டுள்ளேன். 

அதன்படி வேலூர் மாவட்டத்திற்கு சபீதா,  விழுப்புரம் மாவட்டத்திற்கு உதயசந்திரன், நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு சிவ் தாஸ் மீனா, ராமநாதபுரம் மாவட்டத்திற்கு முனைவர் விஜயகுமார், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட் டங்களுக்கு முனைவர் சத்யகோபால், புதுக்கோட்டை மாவட்டத்திற்கு சமயமூர்த்தி, தூத்துக்குடி மாவட்டத்திற்கு குமார் ஜயந்த், திருநெல்வேலி மாவட்டத்திற்கு முனைவர் செந்தில்குமார், கன்னியா குமரி மாவட்டத்திற்கு அதுல் ஆனந்த் ஆகியோர் அனுப்பப்பட்டுள்ளனர். '

தற்போது கடலூர் மாவட்டத்தில் உள்ள ககன்தீப் சிங் பேடி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ராஜாராமன்,  திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள எஸ்.கே.பிரபாகர், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பிரதீப் யாதவ், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு அனுப்பப்பட்டுள்ள ராஜேஷ் லக்கானி ஆகியோர் அந்தந்த மாவட்டங்களிலேயே ஒருங்கிணைப்புப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள நான் உத்தரவிட்டுள்ளேன். 

மேலும் இந்த மாவட்ட அமைச்சர்களும், தங்கள் மாவட்டங்களிலேயே இருந்து முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைத்து அதிகாரிகளுக்கு தக்க அறிவுரை வழங்கவும்  நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment