கரூர் மாவட்ட அ.தி.மு.க
செயலாளர் மற்றும் தமிழக போக்குவரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை கட்சி பொறுப்பிலிருந்தும்,
அமைச்சர் பதவியிலிருந்தும் அ.தி.மு.க பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா
அதிரடியாக நீக்கினார். வருங்கால தமிழக முதல்வர் என்ற நினைப்பு மற்றும் பல்வேறு குற்றச்சாட்டுகள்
பெயரில் அந்த முடிவை அவர் எடுத்தார். இதனால் போக்குவரத்து துறை ஊழியர்கள், துறை அதிகாரிகள்,
லாரி உரிமையாளர்கள் மற்றும் கரூரில் உள்ள அ.தி.மு.க கட்சியினரும் வெடி வைத்து என பலரும்
கொண்டாடினார்கள். இது ஒரு புறம் இருக்க இவருக்கு பதில் இவரை கண்காணிக்கவும், இவருக்கு
பதிலாக தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் பதவியையும், கரூர் மாவட்ட பொறுப்பாளர் பதவியையும்
தமிழக முதல்வரும், அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலாளருமான ஜெயலலிதா தொழிற்துறை அமைச்சரும்,
நாமக்கல் மாவட்ட செயலாளருமான தங்கமணியை அறிவித்தார். ஆனால் இவரை அறிவித்த பின்னர் மாஜி
செயலாளரும், மாஜி அமைச்சருமான செந்தில் பாலாஜி இல்லாமல் ஒரு இடத்திற்கு கூட சென்றதில்லை.
அப்படி பட்ட உண்மை விசுவாசி இவர் எப்பொழுதுமே மாப்பிள்ளை, மாப்பிள்ளை என அழைத்து வந்ததோடு,
அவர் இல்லாமல் எந்த நிகழ்ச்சிக்கு சென்றதில்லை. இப்படி பட்ட நேரத்தில், மாஜியை விசாரணை
செய்ய தான் நம்மை அம்மா அறிவித்தார் என்ற உணர்வு கொஞ்சம் கூட இல்லாமல் மாப்ளே ! மாப்ளே
என எங்கு சென்றாலும் கொஞ்சி குழாவி வந்த நிலையில் கட்சியின் உண்மை இரத்தத்தின் இரத்தங்கள்
அம்மா விற்கு புகார் மேல் புகார் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் கரூர் மாவட்ட செயலாளராக
விஜயபாஸ்கரை அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவிக்க ,தலைமைக்கழகம் அறிவித்தது.
ஆனால் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பிற்கிணங்க, இன்று வரை தற்போதைய மாவட்ட செயலாளருக்கு
மரியாதை கொடுக்காமல் அவரே தன்னிச்சையாக பணிகள் செய்வது, மாவட்ட ஆட்சியரை தனது கட்டுப்பாட்டிற்குள்
வைத்து கொண்டு மழை நிவாரண பணிகள் மற்றும் அரசு நலத்திட்ட பணிகளை மாவட்ட செயலாளரான விஜயபாஸ்கரை
அழைக்காமலும், கரூர் மாவட்ட அம்மா பேரவை செயலாளரும், கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ வுமான
எஸ்.காமராஜையும் கட்சி மூத்த முன்னோடிகள் யாரையும் அழைக்காமல் திடீர் திடீர் என சோதனை,
நிவாரண பணிகள் என தன்னிச்சையாகவே இன்று வரை செயல்பட்டு வருவதோடு, கரூர் நகராட்சி கவுன்சிலர்கள்
43 நபர்களை தனது கட்டுபாட்டிற்குள்ளேயே வைத்துள்ளார். பெயரளவிற்கு கூட கரூர் நகர செயலாளரும்,
நகர்மன்ற உறுப்பினருமான வை.நெடுஞ்செழியனை மதிப்பதில்லை. தற்போதும் அமைச்சர் செந்தில்
பாலாஜி என்று தான் கலெக்டர் அலுவலகமே கூறிக்கொள்கிறது. அப்படியென்றால் ஜெ வழியில் மக்களின்
முதல்வர் என்றழைக்கப்பட்டதால், மக்களின் போக்குவரத்து துறை அமைச்சர் என்ற நினைப்பா
? இந்தியாவிலேயே சிறப்பான பல்வேறு நலத்திட்டங்களை கொடுத்து வரும் சீரிய முதல்வர் ஜெயலலிதா
அறிவித்தும், மாவட்ட ஆட்சியர் ஜெயந்தி முதல் அரசுத்துறை அதிகாரிகள், நகராட்சி உறுப்பினர்கள்
மற்றும் அமைச்சரின் கைப்புள்ளைகளான 14 பேர்
கொண்ட நபர்கள் (அதாவது நடோடிகள் படத்தில் வருவது போல அம்மாவின் பெயரை கூறும் போது கூட
கை தட்டாதவர்கள் செந்தில் பாலாஜியின் பெயரை சொல்லும் போது மட்டும் கை தட்டுவது) என
இவர்கள் வைத்தது தான் சட்டமாக கரூர் மாவட்ட அளவில் உள்ளது.
தமிழக முதல்வரும்,
அ.தி.மு.க பொதுச்செயலாளர் அறிவித்த விஜயபாஸ்கருக்கு கரூர் மாவட்டத்தில் மரியாதை இல்லை,
அம்மாவினால் கட்சி பொறுப்பு, அமைச்சர் பதவி பறிக்கப்பட்ட மாஜிக்கு இவ்வளவு செல்வாக்கு
இன்னமும் இருக்கிறது என்றால் அப்ப , நிஜமாகவே அடுத்த முதல்வர் செந்தில் பாலாஜி தானா
! என்பதை கரூர் மாவட்டத்திற்கு முதல்வர் ஜெயலலிதா வந்து பார்த்தால் தான் தெரியும்,
என்ன ஒரு மரியாதை,
என்ன ஒரு தொழி தர்மம் வாழட்டும் கட்சி பெருமை, தற்போது நியமிக்க பட்ட கரூர் மாவட்ட
செயலாளர் விஜயபாஸ்கர், கரூர் மாவட்ட அம்மா பேரவை செயலாளரும், கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ
வுமான எஸ்.காமராஜ், கரூர் நகர செயலாளர் வை.நெடுஞ்செழியன்
உள்ளிட்ட கட்சியின் 99 விழுக்காடு அம்மாவை நம்பியிருந்தவர்களின் நிலைமை என்னதான் என்பதை
பொறுத்து தான் பார்க்க வேண்டும்.
கரூர் மாவட்ட ஆட்சியர்
அலுவலக வளாகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நடைபெற்ற மழை நிவாரண நிதி
வழங்கல் நிகழ்ச்சியில் அமைச்சர் வந்து விட்டாரா என கேள்வி கேட்ட கலெக்டர் ஜெயந்தி,
அரசுத்துறை அதிகாரிகள் என பல்வேறு கட்சி நிர்வாகிகள் இன்று அமைச்சர் அமைச்சர் என செந்தில்
பாலாஜியை தான் கூப்பிடுகிறார்கள். இது அவர் மீதுள்ள மரியாதையா ? அவர் கட்சியில் சேர்த்த
சொத்துக்களை வைத்தா என்பதை அம்மா முதல்வர் எடுக்கும் முடிவில் தான் தெரியவுள்ளது.
No comments:
Post a Comment