கரூர் ஜவஹர் பஜாரில்
சுமார் 10 க்கும் மேற்பட்டவர்கள் பழக்கடை வைத்து
அதை தள்ளுவண்டிகளில் வைத்து பிழைப்பு நடத்தி வருபவர்கள். இவர்கள் மதுரை மாவட்டம், மேலூர்
பகுதியில் வசித்து வந்து கரூரில் தொழில் பண்ணி வருபவர்கள் ஆவார்கள். இந்த கரூரில் வசித்து
பழத்தொழில் செய்பவர்களுக்கு கரூரில் ஒரு தனியார் புருட்ஸ் நிறுவன அதிபர் சிவசாமி மற்றும்
அவருடன் உள்ள அடியாட்கள் பழங்களை கடனுக்கு பழங்களை கொடுப்பதோடு, அவர்களுக்கு பணத்தையும்
கொடுத்து வட்டி வாங்கி வந்துள்ளனர். இந்நிலையில் பாண்டியன் என்பவர் மேலூர் பகுதியை
சார்ந்தவர் என்பதாலும், கரூரில் பழக்கடை நடத்தி வந்ததாலும், அவருக்கும் பாதிக்கப்பட்ட அவருடன் சேர்த்து மொத்தம்
9 பேருக்கு பணம் கொடுத்துள்ளார். மேலும் அவர்களுக்கு பணத்தையும், பழ பொருட்களையும்
கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் பாண்டியன் என்பவர் கடந்த 2 ½ வருடத்திற்கு முன்பே
கரூரை விட்டு ஓடி விட்டார். இதனால் பாண்டியன் கட்ட வேண்டிய பணத்தையும் எங்களிடம் அதற்கான
தொகையை கேட்டு தொல்லை கொடுத்ததாலும் எங்களுக்கும், அவர்களுக்கும் எந்த வித சம்பந்தமில்லை
எனவும் தெரிவித்தோம், மேலும் சம்பந்தப்பட்ட பாண்டியனின் வீட்டையும் நாங்களே சென்று
காண்பித்தோம், இருப்பினும் எங்களிடம் மிரட்டி
அந்த தனியார் புருட்ஸ் கம்பெனி அதிபர் அடியாட்களுடன் வந்து மிரட்டியதோடு, அனைத்து பழக்கடை
(அதாவது மதுரை மேலூர்) பகுதியை சார்ந்த மக்களை மிரட்டி வருவதால் பாதிக்கப்பட்ட ஆண்,
பெண் பழக்கடை வியாபாரிகள் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே விடம்
புகார் மனுக்களை குடும்பத்தோடு கொடுத்தனர். இந்த சம்பவம் கரூர் பகுதியில் பெரும் பரபரப்பு
ஏற்பட்டது.
No comments:
Post a Comment