சேலம் மாவட்ட உரிமையியல் நீதிபதியாக பணியாற்றி வந்தவர்ர் பிரகாஸ் (32) , இவர் தனது நண்பர் பெங்களூரை சேர்ந்த மருத்துவர் பிரதீப் (28) எனபவருடன் தனது காரில் சேலத்திலிருந்து கரூர் வழியாக திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் கரூர் – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை அரவக்குறிச்சி தாலுக்கா புங்கம்பாடி என்ற இடத்தில் எதிரே வந்த கார் முன் சக்கர டயர் திடீரென வெடித்து தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தடுப்பு சுவரை தாண்டி நீதிபதி சென்ற காரின் மீது பயங்கரமாக மோதியத்தில் சம்பவ இடத்திலேயே நீதிபதி பிரகாஸ் (32) , ராஜம்மாள் (48) , சூர்யா (10) மூவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் விபத்தில் படுகாயமடைந்த 8 பேர் கரூர் தனியார் மற்றும் அரசு தலைமை மருத்வமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர் . இதில் வள்ளி , சாந்தி, ஓட்டுனர் பழனிச்சாமி மூவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் 5 பேரை படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். நீதிபதி கார் மீது மோதி விபத்து ஏற்படுத்திய காரில் பயணம் செய்த திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு பி.வி.தாஸ் காலனியை ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் திண்டுக்கலில் இருந்து கொடுமுடிக்கு களிப்பு களிப்பதற்காக சென்றவர்கள் என்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. மேலும் விபத்தில் ஒரே குடும்பத்தை சார்ந்த 5 பேர் பலியான சம்பவமும், நீதிபதி ஒருவர் என மொத்தம் 6 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்து அரவக்குறிச்சி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறனர். மேலும் சம்பவம் குறித்து கரூர் மாவட்ட ஆட்சியர் ஜெயந்தி நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார். இந்த சம்பவம் தமிழக அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
Thursday, 12 November 2015
கருர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் காரும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் சேலம் மாவட்ட உரிமையில் நீதிபதி உட்பட 6 பேர் பலி – படுகாயமடைந்த 5 பேர் தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் அனுமதி. கோவிலுக்கு களிப்பு களிக்க சென்ற போது நிகழ்ந்த விபத்தினால் பெரும் சோகம்
சேலம் மாவட்ட உரிமையியல் நீதிபதியாக பணியாற்றி வந்தவர்ர் பிரகாஸ் (32) , இவர் தனது நண்பர் பெங்களூரை சேர்ந்த மருத்துவர் பிரதீப் (28) எனபவருடன் தனது காரில் சேலத்திலிருந்து கரூர் வழியாக திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் கரூர் – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை அரவக்குறிச்சி தாலுக்கா புங்கம்பாடி என்ற இடத்தில் எதிரே வந்த கார் முன் சக்கர டயர் திடீரென வெடித்து தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தடுப்பு சுவரை தாண்டி நீதிபதி சென்ற காரின் மீது பயங்கரமாக மோதியத்தில் சம்பவ இடத்திலேயே நீதிபதி பிரகாஸ் (32) , ராஜம்மாள் (48) , சூர்யா (10) மூவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் விபத்தில் படுகாயமடைந்த 8 பேர் கரூர் தனியார் மற்றும் அரசு தலைமை மருத்வமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர் . இதில் வள்ளி , சாந்தி, ஓட்டுனர் பழனிச்சாமி மூவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் 5 பேரை படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். நீதிபதி கார் மீது மோதி விபத்து ஏற்படுத்திய காரில் பயணம் செய்த திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு பி.வி.தாஸ் காலனியை ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் திண்டுக்கலில் இருந்து கொடுமுடிக்கு களிப்பு களிப்பதற்காக சென்றவர்கள் என்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. மேலும் விபத்தில் ஒரே குடும்பத்தை சார்ந்த 5 பேர் பலியான சம்பவமும், நீதிபதி ஒருவர் என மொத்தம் 6 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்து அரவக்குறிச்சி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறனர். மேலும் சம்பவம் குறித்து கரூர் மாவட்ட ஆட்சியர் ஜெயந்தி நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார். இந்த சம்பவம் தமிழக அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment