வடகிழக்கு பருவமழை நாளை முதல் மேலும் தீவிரமடையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை நுங்கம்பாக்கம் வானிலை ஆய்வு மைய அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த இயக்குநர் ரமணன், "வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது. இது மேலும் வலுவடைந்து அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்.
வடகிழக்கு பருவமழை நாளை முதல் மேலும் தீவிரமடையும். வட கடலோர மாவட்டங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் நாளை முதல் கடலுக்குச் செல்ல வேண்டாம்" சென்றார்.
அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை
அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் கனமழை தொடரும், உள் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஒட்டப்பிடாரம், உத்திரமேரூர், மணியாச்சியில் 7 செ.மீ மழை பெய்துள்ளது.
No comments:
Post a Comment