Sunday, 15 November 2015

ரூ.41 கோடி செலவில் கட்டப்பட்ட வனஅலுவலர் குடியிருப்புகள், வண்ணத்துப்பூச்சி பூங்கா: முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்


தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:–
முதல்–அமைச்சர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில், வனத்துறையின் சார்பில் 40 கோடியே 93 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாவட்ட வன அலுவலர் குடியிருப்புகள், உதவி வனப் பாதுகாவலர் குடியிருப்புகள், வனச்சரகர் குடியிருப்புகள், வனவர் குடியிருப்புகள், வன அலுவலகக் கட்டடங்கள், வன ஓய்வு விடுதிகள், வேட்டைத் தடுப்பு முகாம் கட்டடங்கள், கண்காணிப்பு கோபுரங்கள், வனப்பொருள் சேமிப்பு கட்டடங்கள், குரங்குகள் மறுவாழ்வு மையங்கள், வண்ணத்துப் பூச்சி பூங்கா மற்றும் நட்சத்திர வனம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.
வனத்துறையின் களஅலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் சீரிய முறையில் தங்கள் பணிகளை ஆற்றுவதற்கு ஏதுவாக தேனி மாவட்டம்– மேகமலை, தூத்துக்குடி, மதுரை, திண்டுக்கல் மற்றும் சிவகங்கை ஆகிய இடங்களில் 1 கோடியே 81 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 5 மாவட்ட வன அலுவலர் குடியிருப்புகள்; திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டம்– திருப்பத்தூர் ஆகிய இடங்களில் 26 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 உதவி வனப் பாதுகாவலர் குடியிருப்புகள்;
திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருவண்ணாமலை, கரூர், சேலம், ஈரோடு, கோயம்புத்தூர், நீலகிரி, விழுப்புரம், திருச்சிராப்பள்ளி, திருப்பூர், வேலூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் 1 கோடியே 69 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 16 வனச்சரகர் குடியிருப்புகள்;
திருச்சிராப்பள்ளி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், நீலகிரி, கன்னியாகுமரி, வேலூர், திருநெல்வேலி, நாமக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் 1 கோடியே 93 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 22 வனவர் குடியிருப்புகள்; தமிழகத்திலுள்ள பதினாறு மாவட்டங்களில் 6 கோடியே 18 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 49 ஒருங்கிணைந்த வனக் காப்பாளர் மற்றும் வனக் காவலர் குடியிருப்புகள்;
காஞ்சிபுரம் மாவட்டம், நன்மங்கலத்தில் 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு பல்லுயிர் பெருக்கம் மற்றும் பசுமையாக்குதல் திட்ட மேலாண்மை நிர்வாக அலுவலகக் கட்டடம்; திருச்சிராப்பள்ளியில் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒரு வனச் செயல்திட்ட தலைமை வனப் பாதுகாவலர் அலுவலகக் கட்டடம்; விழுப்புரம் மற்றும் வேலூர் ஆகிய இடங்களில் 87 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 வனப்பாதுகாவலர் அலுவலகக் கட்டடங்கள்;
திருவாரூர், திருச்சிராப்பள்ளி, தூத்துக்குடி, திருப்பூர், பெரம்பலூர், நாமக்கல் மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் 2 கோடியே 3 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 7 மாவட்ட வன அலுவலகக் கட்டடங்கள்; தமிழகத்திலுள்ள பதிமூன்று மாவட்டங்களில் 1 கோடியே 78 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 13 வனவிரிவாக்க அலுவலகக் கட்டடங்கள்; திருச்சிராப்பள்ளி, வேலூர், ஈரோடு, திண்டுக்கல், விழுப்புரம் ஆகிய இடங்களில் 62 லட்சத்து 39 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 5 வனப்பாதுகாப்புப் படை அலுவலகக் கட்டடங்கள்; தேனி, நாமக்கல், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவண்ணாமலை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 2 கோடியே 1 லட்சத்து 1 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 17 வனச்சரகர் அலுவலகக் கட்டடங்கள்;
கடலூர் மாவட்டம்– கில்லை (பிச்சாவரம்), நாமக்கல், கன்னியாகுமரி, திருச்சிராப்பள்ளி மாவட்டம்– டாப் செங்காட்டுப்பட்டி ஆகிய இடங்களில் 1 கோடியே 9 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 4 வன ஓய்வு விடுதிகள்; தேனி மாவட்டம்– வைகை அணை வனவியல் பயிற்சி கல்லூரியில் 71 லட்சத்து 93 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வனத்துறைகளப் பணியாளர்களுக்கான விடுதிக் கட்டடம்; கன்னியாகுமரி மாவட்டம் – தேரூர், நாமக்கல் மாவட்டம்– அத்தனூர், அரியலூர் மாவட்டம் – கரைவெட்டி பறவைகள் சரணாலயம் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டம் – பச்சைமலை ஆகிய இடங்களில் 60 லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 4 கருத்து விளக்க கூடங்கள்;
திருநெல்வேலி, ஈரோடு, காஞ்சிபுரம், கோயம்புத்தூர், விருதுநகர், கன்னியாகுமரி, வேலூர், தேனி, திண்டுக்கல் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் 1 கோடியே 7 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 20 வேட்டைத் தடுப்பு முகாம் கட்டடங்கள்; கன்னியாகுமரி மாவட்டம் – மணக்குடி, தேரூர், புத்தாலம், காஞ்சிபுரம் மாவட்டம் – பள்ளிக்கரணை சதுப்புநிலம் ஆகிய இடங்களில் 35 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 5 பறவைகள் கண்காணிப்பு கோபுரங்கள்; தேனி, மதுரை, நீலகிரி, திருவண்ணாமலை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, கரூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் 51 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 22 தீத்தடுப்பு கண்காணிப்பு கோபுரங்கள்;
கடலூர் மாவட்டம்– நெய்வேலி, நாகப்பட்டினம் மாவட்டம் – முடிதிருச்சாம் பள்ளி, கோயம்புத்தூர் மாவட்டம் – மாங்கரை, ஈரோடு மாவட்டம் – அரச்சாலூர் மற்றும் சேலம் ஆகிய இடங்களில் 12 லட்சத்து 39 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 5 வாகன நிறுத்துமிடம்; திண்டுக்கல் மாவட்டம் – பூம்பாறைமற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் – பள்ளிக்கரணை சதுப்பு நிலம் ஆகிய இடங்களில் 12 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 2 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள்; காஞ்சிபுரம் மாவட்டம் – பள்ளிக்கரணை சதுப்புநிலப் பகுதியில் 17 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப் பட்டுள்ள 2 வனச்சோதனை சாவடிகள், கன்னியாகுமரி மாவட்டம் – காளிகேசத்தில் 24 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சோலாகாடுகள் விழிப்புணர்வு மையம்; வேலூர் மாவட்டம் – ஜரபெண்டா, வசந்தாபுரம், மந்தாரக்குட்டை, பனங்காட்டேரி, நாயக்கனேரி ஆகிய இடங்களில் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 5 வனப்பொருள் சேமிப்பு கட்டடங்கள்;
திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, வேலூர், நீலகிரி, கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களில் 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 8 குரங்குகள் மறுவாழ்வு மையங்கள்; வேலூர் மாவட்டம்– கோவிந்தாபுரம் காப்புக்காடு மற்றும் தில்லைகாப்புக்காடு, திருவண்ணாமலை மாவட்டம்–பீமன் அருவி ஆகிய இடங்களில் 16 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 3 மலையேற்றப் பாதை கட்டடங்கள்;
திருச்சிராப்பள்ளி மாவட்டம் – ஸ்ரீரங்கம் பகுதியிலுள்ள மேல்அணைக் கட்டுகாப்புக் காட்டில் 8 கோடியே 5 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள வண்ணத்துப்பூச்சி பூங்கா மற்றும் நட்சத்திர வனம்; ஆகியவற்றை முதல்– அமைச்சர் ஜெயலலிதா திறந்துவைத்தார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment