Tuesday 24 November 2015

கரூர் செல்லாண்டிபாளையத்தில் புழுக்களுடன் குடிநீர் - பொதுமக்கள் கோரிக்கை





கரூர் அருகே பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்ட குடிநீரில் புழுக்கள் மற்றும் தூசிகள் மிதந்ததால் பரபரப்பு – நடவடிக்கை கோரி நகராட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர் அருகே உள்ள திருமாநிலையூரை அடுத்த செல்லாண்டிப்பாளையத்தில் குடியிருக்கும் மக்களுக்கு கரூர் நகராட்சி மூலமாக தான் குடிநீர் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அப்பகுதியில் கார்கோனன் தெருவை சார்ந்த மக்களுக்கு குடி தண்ணீர் விநியோகிக்கப்பட்டதில், அந்த குடிநீரில் புழு, பூச்சிகள் முண்டிக்கிடந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்களுக்கு நகராட்சி நிர்வாகத்தினருக்கும், கவுன்சிலருக்கும் தகவல் தெரிவிக்க எந்த வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் தொடர்மழையை அடுத்து ஆங்காங்கே தொற்று நோய்கள் பரவி வரும் நிலையில் இது போல புழுக்கள் கலந்த குடிநீரை பொதுமக்கள் பருகினால் ஏதாவது வியாதிகள் தான் உருவாகும் என்பதினால் உடனே போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த புழுக்கள் வந்த குடிநீர் வந்த காட்சியை பார்த்த பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட போவதாகவும், அவர்கள் அறிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment