Tuesday, 17 November 2015

பா.ம.க ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் இருந்து ஒரு துளி கூட மணல் அள்ள முடியாது கரூரில் நடைபெற்ற பா.ம.க பொதுக்குழுக் கூட்டத்தில் பா.ம.க கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாசு ஆவேசம்



 தி.மு.க மற்றும் .தி.மு.. விற்கு மக்கள் கோர்ட் தீர்ப்பு சொல்லும்  காலம் நெருங்கி விட்டது, பா.ம.க ஆட்சிக்கு வந்தால் ஒரு துளி மணல் கூட அள்ளமுடியாது கரூரில் நடந்த பா... சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆவேசம்.

  கரூர் மாவட்ட  பா... சிறப்பு பொதுக்குழு கூட்டம் தனியார் கூட்ட அரங்கில் நடைபெற்றதுகூட்டத்திற்கு மாநில துணை பொதுச்செயலாளர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். பா... மாநில தலைவர் ஜி.கே. மணி முன்னிலை வகித்து பேசினார்மேலும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பா... நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சிறப்புரை ஆற்றினார்அப்போது அவர் பேசிய போதுஒரு மணல் உருவாக சுமார் நூறு வருடங்கள் ஆகிறதுதமிழ்நாட்டிலிருந்து கேரளா,  கர்நாடகத்திற்கு தினமும் சுமார் ஆயிரம் லோடு மணல் கொண்டு செல்லப்படுகிறதுகேரளா,  கர்நாடகாவில் ஆறுகளில் மணல் இருக்கிறது. ஆனால் அங்கு மணல் அள்ளுவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதுசட்டம் போடப்பட்டுள்ளதுதி.மு.க,  .தி.மு.. வில் உள்ளவர்கள் குறிப்பாக முன்னாள் அமைச்சர் ராஜா,  கனிமொழி  ஆகியோரும்  .தி.மு..வில் ஜெயலலிதாவும் ஊழல் குற்றச்சாட்டுக்காக சிறை சென்றுள்ளனர்எனவே தி.மு..விற்கும் .தி.மு..விற்கும் மக்கள் கோர்ட் தீர்ப்பு வழங்கும் காலம் நெருங்கி  உள்ளதுஎன்று  அவர் பேசினார்

No comments:

Post a Comment