Thursday 19 November 2015

தமிழகத்தில் கனமழைக்கு பலியான மேலும் 24 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி: முதலமைச்சர் ஜெ அறிவிப்பு


தமிழகத்தில் கனமழை காரணமாக பல்வேறு நிகழ்வுகளில் இறந்த மேலும் 14 பேரின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில், பல்வேறு மாவட்டங்களில் பெய்த  வடகிழக்குப் பருவமழையின் காரணமாக 11.11.2015 அன்று கடலூர் மாவட்டம், வேப்பூர் வட்டம்,  பூளம்பாடி கிராமத்தைச் சேர்ந்த சின்னதுரை என்பவரின் மகன் அசோக்குமார்; பூளம்பாடி கிராமத்தைச் சேர்ந்த ஜோதிவேல் என்பவரின் மகன் சுந்தரராஜன்; கடலூர் வட்டம், திருபத்திரிபுலியூர் கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகன் அருள்நிதி;

13.11.2015  அன்று விளங்கல்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மகள் ஹரிதா; மற்றும் ராதாகிருஷ்ணன் என்பவரின் மகள் பிரியதர்ஷினி; காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புத்தூரைச் சேர்ந்த வரததாஜன் என்பவரின் மகன் மணி என்கிற மணிகண்டன்;

15.11.2015 அன்று சிதம்பரம் வட்டம், பழைய புவனகிரி கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை என்பவரின் மகன் ராமு; குறிஞ்சிப்பாடி வட்டம், சிறுப்பாளையூர் கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரின் மனைவி ரேவதி; திருத்தனகிரி கிராமத்தைச் சேர்ந்த அய்யாகண்ணு என்பவரின் மகன் வெள்ளையன்; சிதம்பரம் வட்டம், சிங்காரத்தோப்பு கிராமத்தைச் சேர்ந்த  அஞ்சப்புலி என்பவரின் மனைவி வள்ளி;

16.11.2015 அன்று காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு வட்டம், வல்லாஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த வேணு என்பவரின் மகன் கண்ணன்;  ஊரப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த முனிராஜ் என்பவரின் மகன் கிரிதரன்; மண்ணிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பாளையம் என்பவரின் மகன் வேதகிரி மற்றும் ராஜேந்திரன் என்பவரின் மகன் சுபு என்கிற கணேசன்; 
          
17.11.2015 அன்று திருப்போரூர் வட்டம், அனுமந்தபுரத்தைச் சேர்ந்த தட்சணாமூர்த்தி என்பவரின் மகன் ஜீவா; வேலூர் மாவட்டம், அரக்கோணம் வட்டம், காவேரிபுரம் கிராமத்தைச் சேர்ந்த தூர்வாசன் என்பவரின் மகன் அரிகரன்; பரமேஸ்வரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கோபால்மந்திரி என்பவரின் மகன் பாலு;

15.11.2015 அன்று சென்னை மாவட்டம், புரசைவாக்கம் வட்டம், படாளத்தைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மகன் சேகர்; பெரம்பூர் வட்டம், புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த ராமதாஸ் என்பவரின் மனைவி வெங்கட்டம்மா; வேளச்சேரி வட்டம், வி.ஜி.பி செல்வா நகரைச் சேர்ந்த பொன்னுசாமி என்பவரின் மகன் ரங்கநாதன்; ஆகியோர் வெள்ளப் பெருக்கின் காரணமாக  நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியையும்;

14.11.2015 அன்று கடலூர் மாவட்டம், புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த வைத்தியநாதன் என்பவரின் மகன் தண்டபாணி; 15.11.2015 அன்று புவனகிரி வட்டம், ரெட்டிகுளம் கிராமத்தைச் சேர்ந்த சுப்புராயன் என்பவரின் மகன் வேணு; ஆகியோர் மழையின் காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில்  பலத்த காயமடைந்து உயிரிழந்தனர் என்ற செய்தியையும்;

15.11.2015 அன்று கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், கருக்கை காலனியைச் சேர்ந்த ராஜீவ் காந்தி என்பவரின் மகள் பிரியதர்ஷினி மின் விளக்கு கம்பம் விழுந்து பலத்த காயமடைந்து உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

15.11.2015 அன்று கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டம், கீழ்மிடாலம் கிராமத்தைச் சேர்ந்த எட்வின் ஜூட் என்பவரின் மகள் சானட்ஜூட் மழையின் காரணமாக மின் கசிவு ஏற்பட்டு மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

தமிழகத்தில் சமீபத்தில் பெய்த கன மழையின் காரணமாக பல்வேறு நிகழ்வுகளில் மேற்கண்ட தேதிகளில் உயிரிழந்த, இந்த 24 நபர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் துயர சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா நான்கு லட்சம் ரூபாய் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளேன்.   

இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment