சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் மாநகர அரசு வக்கீல், ஜெயலலிதா சார்பில் 2 அவதூறு வழக்குகளை தாக்கல் செய்துள்ளார். அந்த வழக்கு மனுக்களில் கூறியிருப்பதாவது:-
ஆனந்த விகடன் வார பத்திரிகையில் ‘ஆட்சி அதிகாரம் செல்வாக்கு பணபலம் என்ன செய்தார் ஜெயலலிதா?’ என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியானது. இந்த செய்தியில், ஜெயலலிதாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக உள்ளது. உள்நோக்கத்துடன் இந்த செய்தி வெளியாகியுள்ளது. எனவே, இந்த அவதூறு செய்தியை வெளியிட்ட ஆனந்த விகடன் பத்திரிகை ஆசிரியர், வெளியீட்டாளர் கண்ணன், பதிப்பாளர் மாதவன் ஆகியோர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இந்த செய்தியின் அடிப்படையில் முரசொலி பத்திரிகையில் தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி, ‘4 ஆண்டு ஆட்சியில் சாதித்தது என்ன?’ என்ற தலைப்பில் கேள்வி-பதில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதிலும், ஜெயலலிதாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக வார்த்தைகள், கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன. எனவே, முரசொலி பத்திரிகையின் ஆசிரியர் முரசொலி செல்வம், கட்டுரை எழுதிய கருணாநிதி ஆகியோர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.இந்த வழக்குகள் நீதிபதி ஆதிநாதன் முன்பு விரைவில் விசாரணைக்கு வர உள்ளன
No comments:
Post a Comment