சென்னையை சேர்ந்த மூத்த
பத்திரிக்கையாளரும், மக்கள் செய்தி மைய நிறுவனருமான வி.அன்பழகன் அன்றே சொன்னார்.
என்ன வெனில்
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைப்பற்றி கவலைப்படாத
தென்னிந்திய நடிகர் சங்கம் – தமிழகத்தை விட்டு துரத்துங்கள்
என்று அது இனிமேல் நடந்துடுவோம் போல உள்ளது.
காற்றுழுத்த தாழ்வு மண்டலத்தால் பெய்த கனமழையால், தமிழகம் முழுவதும்
தத்தளிக்கிறது. மழை வெள்ளத்திற்கு சுமார் 70 பேர் பலியாகி உள்ளார்கள்.
லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கிறார்கள். சென்னை மாநகரமே மழை நீரில்
முழ்கிவிட்டது. தமிழக அரசியல் தலைவர்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை
சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார்கள்.
தமிழக மக்கள் மயக்கி, பூம், பூம் மாடு மாதிரி
தலையாட்ட வைத்திருக்கும் திரைப்பட நடிகர், நடிகைகள் புயல் மழையால் தத்தளிக்கும்
தமிழக மக்களைப்பற்றி கவலைப்படவில்லை. தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில்
வெற்றிப் பெற்ற நடிகர்கள், 16.11.15 அன்று முதல்வரை சந்தித்து ஆசி பெற்றார்கள்.
இது வரை புயல், மழையால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்காக அறிக்கை கூட
கொடுக்கவில்லை தென்னிந்திய நடிகர் சங்கம்..
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலை,
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து டிவி மீடியாக்களும் பெரிய அளவில் ஒளிப்பரப்பினார்கள்.
ஆனால் தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட
மக்களுக்கு ஆறுதலாக அறிக்கை வெளியிடவில்லையே என்று செய்தி ஒளிப்பரப்பவில்லை.
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றிப்
பெற்ற விஷால் அணியினர், டி.டி.கே சாலையில் உள்ள மதுபான பாரில் இரவு 1மணி முதல்
விடிய, விடிய குடித்து கும்மாளம் போட்டார்கள்.. விடிய, விடிய மதுபான பார் நடந்ததை
சென்னை மாநகர காவல்துறையினர் கண்டு கொள்ளவில்லை.
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணி
வெற்றி பெற, முழுமையாக செலவு செய்தது நடிகர் ரித்திஷ், மதுரை பாபா இருவரும்தான்.
தற்போது இருவருமே விஷால் அணி மீது அதிருப்தியில் இருக்கிறார்கள்..
மழை, வெள்ளத்தால் தவிக்கும், உங்களுக்கு ஆறுதல் சொல்லக் கூட விருப்பம்
இல்லாத தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் மற்றும் திரைப்படத்துறையினரை, தமிழக
மக்களே இனி நம்பாதீர்கள்.. திரைப்பட கும்பலை, தமிழகத்தை விட்டு துரத்துங்கள்...
தமிழக மக்களே இனியும் சினிமா மோகத்தால், தமிழ்நாட்டை அழிவுப்பாதைக்கு
கொண்டு செல்லாதீர்கள்..எங்களுக்கு சூடு சொரணை உள்ளது என்று நிருபித்து
காட்டுங்கள்..
என கடந்த சில தினங்களுக்கு முன்னரே மக்களை
சிந்திக்க வைத்தார். அது தற்போது உண்மையாகி விட்டது. காரணம் சினிமாக்காரர்கள்
யார், மக்கள் தங்களின் மகிழ்ச்சியை வெளிக் கொணர திரையரங்குகளில் சென்று பொழுது
போக்கிற்காக சினிமா பார்ப்பது வழக்கம். அதுவும் அந்த படம் தமிழில் பெயர்
வைத்திருந்தால் கேளிக்கை வரி ரத்து என்று பல நல்ல திட்டங்களை மத்திய, மாநில அரசு
தீட்டி வருகிறது.
அதிலும் தமிழ்நாட்டில் அன்றே
சான்றோர்களின் சொல் படி தமிழ் என்பது இயல், இசை, நாடகம் என முத்தமிழ் என பிரித்து
தமிழை வகைப்படுத்தினர். ஆனால் தமிழகத்தில் அதே தமிழ் பேசும் மக்கள் மழை
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட நேரத்தில் இசை, நாடகம் என இரு தமிழில் நடித்து இயல்
தமிழ் என்னும் வடிவத்தில் ஒரு திரைப்படமாக தான் திரைப்படங்கள் வெளியாகி வருகிறது.
இதைவிட்டு நாங்கள் ஏன் சென்று பார்க்கனும் என்று சொல்லும் நடிகர்கள். இந்த மழை
வெள்ளம், பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் இருக்கும் இடத்திற்கு வாக்குகள் கேட்க வந்தாலோ
அவர்களை செருப்பால் அடித்து துரத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. கடலூர்,
திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பகுத்தறிவாளர்கள் மக்களிடையே
இந்த விஷயத்தை பூதாகரமாக்கி வரும் நேரத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும்
அவர்களின் உத்திரவிற்கிணங்க மாவட்ட ஆட்சியர் முதல் மாநில அமைச்சர்கள் வரை
ஆங்காங்கே நேரில் பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். மேலும் ம.தி.மு.க,
தே.மு.தி.க, தி.மு.க உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகளும் மக்களை பாதிக்கப்பட்ட
பகுதிக்கே சென்று நேரில் ஆறுதல் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment