Friday 14 August 2015

நாட்டின் 69-வது சுதந்திர தினம் : சென்னை கோட்டையில் முதல்வர் ஜெ. கொடி ஏற்றி - உரை!

நாட்டின் 69-வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை தலைமை செயலக கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ஜெயலலிதா இன்று (15-08-15) காலை கொடி ஏற்றி வைத்தார். அதன் பின்னர் அப்துல்கலாம் விருது உள்ளிட்ட விருதுகளை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.
நாட்டின் சுதந்திரதின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். தமிழக அரசின் சார்பில் சென்னை கோட்டையில் இன்று காலை சுதந்திர தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் முதல்வர் ஜெயலலிதா காலை 8.50 மணிக்கு மூவர்ண தேசிய கொடியை கோட்டை கொத்தளத்தில் அவர் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். 
இதன் பின்னர் முதல்வர் ஜெயலலிதா சுதந்திர தின உரை நிகழ்த்தினார். பின்னர் முதல்வர் ஜெயலலிதா உரையாற்றினார். இதைத்தொடர்ந்து பல்வேறு விருதுகளை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். தமிழகத்தில் இந்த ஆண்டு சுதந்திர தின விழாவில், மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாம் பெயரில் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை இஸ்ரோ திட்ட இயக்குநர் வளர்மதிக்கு முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.


No comments:

Post a Comment