Friday 14 August 2015

கொடைக்கானலில் விதி மீறி கட்டப்பட்டகட்டிடங்களுக்கு சீல் வைப்பு. நகராட்சிஅதிகாரிகள் அதிரடி நடவடிக்கை. விதிமீறி கட்டிடம் கட்டியவர்கள் அதிர்ச்சி.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப் பிரதேசம் என்பதால் கட்டிடங்கள் கட்டுவதற்கு வரைமுறைப்படுத்த 1993 ஆம் ஆண்டு மாஸ்டர் பிளான் என்ற விதி அமுல்படுத்தப்பட்டது. இதன்படி பத்து மீட்டர் உயரத்திலோ அல்லது தரைப்பகுதி மற்றும் மேல்தளம் ஒன்றும் கட்டிக் கொள்ளலாம். ஆனால் இந்த அரசு விதியை மீறி கொடைக்கானலில் சுமார் 3000க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் கட்டப்பட்டு அதன்மீது உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் கடந்த ஒரு வருட காலமாக மேலும் 500க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதை கண்டறிந்த நகராட்சி நிர்வாகம் இதுகுறித்து விளக்கம் கேட்டு கட்டிட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்ட நிலையில் தற்போது இதுபோன்ற விதியை மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க நகராட்சி நிர்வாகம் திடீரென முன்வந்து இன்று நகராட்சி ஆணையாளர் காளிமுத்து தலைமையில் நகராட்சி அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் இணைந்து பழைய கான்வெண்ட் ரோட்டில் உள்ள மூன்று மாடி கட்டிடம், கல்லுக்குழி பகுதியில் உள்ள மூன்று மாடி கட்டிடம் மற்றும் நாயுடுபுறம் பகுதியில் உள்ள கட்டிடம், அண்ணா சாலையில் உள்ள கட்டிடம் என நான்கு கட்டிடங்களுக்கு சீல் வைத்தனர். இதனால் விதிமீறி கட்டப்பட்ட கட்டிட உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த திடீர் நடவடிக்கை குறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில் நீதிமன்ற உத்தரவின்படி 50 கட்டிடங்களுக்கு முதற்கட்டமாக சீல் வைக்க முடிவெடுக்கப்பட்டு அதற்கான பணி இன்று தொடங்கியுள்ளது. இந்தப் பணிகள் தொடர்ந்து நடைபெறும் இவ்வாறு கூறினார்.

No comments:

Post a Comment