கரூர் குருவட்ட
அளவிலான போட்டியில் சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஓட்டு மொத்த சாம்பியன் ஷிப் – வெண்ணைமலையில்
மாணவ, மாணவிகளிடையே பாராட்டு
2015 – 2016 ம்
ஆண்டிற்கான குறுவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் கரூரில் நடைபெற்றது. இதில் வெண்ணைமலை
சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிரிவில் 143 புள்ளிகளும், மாணவியர் பிரிவில்
158 புள்ளிகளும் பெற்று ஓட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்றார்கள். இது மட்டுமில்லாது
இந்த வெற்றி கடந்த 27 ஆண்டுகளாக சேரன் பள்ளி மாணவர்களும், மாணவிகள் 9 ஆண்டுகளாகவும்
தொடர்ந்து பெற்று வருகின்றனர்.
மேலும் 14 வயதுக்குட்பட்ட
பிரிவில் 8 ம் வகுப்பு மாணவி C.ஹரிணி 100 மீட்டர் மற்றும் 80 மீட்டர் தடை தாண்டும்
போட்டியில் முதலிடமும், நீளம் தாண்டுதல் போட்டியில் 2 ஆம் இடமும் பெற்று 13 புள்ளிகளுடன்
தனி நபர் சாம்பியன் பட்டத்தை வென்றார். 17 வயதுக்குட்பட்ட பிரிவில் 10 ம் வகுப்பு மாணவி,
S.B.சினேகா பிரபா, 200 மீட்டரில் முதலிடமும், நீளம் தாண்டுதல் போட்டியில் இரண்டாமிடமும்
பெற்று 11 தனிநபர் பட்டம் வென்றார். 19 வயதுக்குட்பட்ட பிரிவில் 12 ம் வகுப்பு மாணவி
p.இந்து 400 மீட்டர் நீளம் தாண்டுதலில் முதலிடமும், மும்முறை தாண்டுதலில் 2 ம் இடம்
பெற்று தனிநபர் சாம்பியன் பட்டத்தை வென்றார்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளையும்,
பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர், ஆசிரியர்களையும், சேரன் பள்ளிகளின் தலைவர் பி.எம்.கருப்பண்ணன்,
தாளாளர் பி.எம்.கே.பாண்டியன், நிர்வாகி பி.எம்.கே.பெரியசாமி, ஆலோசகர் பி.செல்லத்துரை, முதல்வர் வி.பழநியப்பன் மற்றும் ஆசிரியர்கள், ஆசிரியைகள் பாராட்டினார்கள்
No comments:
Post a Comment