Friday 14 August 2015

தமிழகத்தில் மதுவிலக்கிற்காக பெண்கள்,குழந்தைகள்,மாணவ-மாணவியர்கள் போராடி வரும் வேலையில் தமிழக முதல் அமைச்சரோ, அல்லது சம்பந்தபட்ட அமைச்சரோ இது வரை மக்களுக்கு ஆதரவாக ஒரு வார்த்தை கூட அறிவிக்காதது மிகவும் வேதனை அளிக்கிறது கரூரில் அணு உலை எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் பேட்டி.

கரூரில் உள்ள தனியார் அரங்கில் தமிழ் உணவர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் அலோசனை கூட்டம் நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அணு உலை எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் தஞ்சை,திருவாரூர்,நாகை போன்ற பகுதிகளில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தை கைவிபடமால் இந்திய அரசு நிறுவனமான ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு அதே திட்டதை நிறைவேற்ற வேறொரு பேரில் கொள்ளைபுறம் வழியாக கொண்டு வருவதற்கு மத்திய அரசு முயற்சிக்கிறது.அதற்கு மாநில அரசும் துணை போகிறது இது ஒரு மக்கள் விரோத செயலை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறது,தமிழகத்திற்கு உணவளிக்கிற நெற்களஞ்சியத்தை பாழ்படுத்தி பன்னாட்டு நிறுவங்களுக்கும் இந்திய அரசுக்கும் லாபம் சம்பாதிப்பதற்காக மண்ணை ,மண்மக்களை கொள்ளையடிப்பது சீரழிப்பது என்பது ஏற்றுகொள்ளமுடியாது மேலும் இந்த ஒ.என்,ஜி,சி திட்டத்தை முற்றிலுமாக கைவிட்டு தஞ்சை டெல்டா பகுதியை தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக பாதுகாப்பட வேண்டும்,எனக்குகூறிய அவர் தமிழகத்தில் மதுவிலக்கிற்காக பெண்கள்,குழந்தைகள்,மாணவ-மாணவியர்கள் போராடி வரும் வேலையில் தமிழக முதல் அமைச்சரோ,அல்லதுசம்பந்தபட்ட அமைச்சரோ இது வரை மக்களுக்கு ஆதரவாக ஒரு வார்த்தை கூட அறிவிக்காதது மிகவும் வருத்தபட கூடிய விசயம் மேலும் மக்களுக்கு விரும்பி கேட்பதை கொடுப்பதற்காக தான் அரசே தவிர அரசுக்கு விருப்பமானதை மக்களிடம் தினிப்பது தவறு என குற்றஞ்சாட்டினார்.

பேட்டி – உதயகுமார் – அணு உலை எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர்


No comments:

Post a Comment