ராஜபாளையம் அம்பலபுளி பஜாரில் நகைக்கடை வைத்திருப்பவர்
சமுத்திரக்கனி. இவர் கடந்த பல வருடங்களாக எதையாவது தங்கத்தில் செய்து பெயர் எடுத்து
வருகிறார். மேலும் தங்கத்தில் பல்வேறு பொருட்களை செய்து சாதனை புரிந்து வருகிறார்.
தற்போது 1.150 கிராம் எடை தங்கத்தில் சிறிய மின்விறிசி தயாரித்து சாதனை புரிந்துள்ளார்.
இதில் 3 இறக்கைகளையும், சுவிட்சையும் வைத்துள்ளார். மினி மோட்டாரையும் பொருத்தியுள்ளார்.
செல் போன் பேட்டரியை பயன்படுத்தி இயக்கும் வகையிலும் இந்த மின்விசிறியை வடிவமைத்துள்ளார்.இது
குறித்து சமுத்திரக்கனி கூறும் போது, ஏதாவது வித்தியாசமாக தங்கத்தில் செய்து உலக சாதனை
புரிய வேண்டும் என்பதே என்னுடைய ஆசையாகும் எனவே தான் பல பொருட்களை மிக குறைந்த எடை
தங்கத்தில் செய்து சாதனை புரிந்து வருகிறேன். இந்த மினி மின்விசிறியை தயாரிப்பதற்கு
மிகவும் சிரமப்பட்டேன். சுமார் 1½ மாதம் வரை கடுமையாக முயற்சி செய்து இதனை உருவாக்கியுள்ளேன்
என்றார். இந்த தங்க விசிறி ஆனது தங்க வியாபாரிகள் மட்டுமில்லாமல், அனைவரையும் கவர்ந்துள்ளது
என்பது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment