Saturday, 3 October 2015

கோகுல்ராஜ் கொலை வழக்கு: யுவராஜ் பரபரப்புத் தகவல்


கோகுல்ராஜ் கொலை வழக்கில் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் எந்த தண்டனையும் ஏற்கத் தயார் என்று இந்த வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள யுவராஜ் தெரிவித்துள்ளார். 

 
 
நாமக்கல் மாவட்டம் திருச்சங்கோட்டைச் சேர்ந்த பொறியில் பட்டதாரி கோகுல்ராஜ் தண்டவாளத்தில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.  இந்த வழக்கில் திருச்சங்கோட்டைச் சேர்ந்த  யுவராஜ் என்பவர் மீது வழக்கு தொடரப்பட்டது. 
 
ஆனால் காவல்துறை விசாரணைக்கு ஒத்துழைக்காத யவுராஜ் , கேரளா போன்ற பல வெளிமாநிலங்களில் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார்.
 
இந்நிலையில் கோகுல்ராஜ் கொலை வழக்கில் விசாரணை அதிகாரியாக இருந்த பெண் டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா  அண்மையில் தற்கொலை செய்து கொண்டார். 
 
உயர்அதிகாரிகளின் நிர்பந்தத்தால் விஷ்ணுப்பிரியா தற்கொலை செய்து கொண்டதாக சர்ச்சை வெடித்தது. இது குறித்து சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று வாட்ஸ் அப் மூலம் ஆடியோ ஒன்றை யுவராஜ் வெளியிட்டிருந்தார்.
 
அதில் கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றம் இழைக்காதவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி அவரை உயர் அதிகாரிகள் நிர்பந்தித்ததாகவும், அதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக விஷ்ணுப்பிரியா  தற்கொலை செய்து கொண்டதாகவும் யுவராஜ் குற்றஞாசாட்டி இருந்தார். 
 
தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் யுவராஜ்  ஒரு தனியார் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார்.

அப்போது அவர் கூறுகையில் " விஷ்ணுப்பிரியா நேர்மையான அதிகாரி. இந்த வழக்கு தொடர்பாக நான் வெளியிட்டுள்ள ஆடியோக்கள் வழக்கை திசை திருப்ப அல்ல.உண்மையை மக்களுக்கு எடுத்து சொல்லவே ஆடியோக்களை வெளியிட்டேன்.

கோகுல்ராஜ் கொலை வழக்கு குறித்து நான் கவலைப்படவில்லை. டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா தற்கொலை வழக்கை காவல்துறையினர் மூடி மறைக்க முயற்சிக்கின்றனர். இந்த வழக்கில் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டும்.

என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், தூக்குத் தண்டனையையும் ஏற்கத் தயாராக இருக்கிறேன். கோகுல்ராஜ் கொலை வழக்கில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. என்னை காப்பாற்றிக் கொள்ளவே தொடர்ந்து தலைமறைவாக உள்ளேன். கோகுல்ராஜ் கொலைவழக்கில் அரசியல் உள்நோக்கத்துடன் என் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. உயிரிழந்த கோகுல்ராஜூக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment