Tuesday, 6 October 2015

சூடு பிடிக்குது சினிமா துறையின் நடிகர் சங்க தேர்தல் - ராதாரவிக்கு பதிலடி! விளாசும் விஷால்!

   டிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் நடிகர் விஷால் தலைமையிலான பாண்டவர் அணியின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் நடிகர்கள் நாசர், விஷால், கார்த்தி, பூச்சி முருகன், பொன்வண்ணன், கருணாஸ், வடிவேலு, கோவை சரளா, குட்டி பத்மினி, ஸ்ரீமன், நந்தா, ரமணா, விக்ராந்த், சங்கீதா, எஸ்.வி.சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.


நடிகர் விஷால் பேசியபோது, “என்னை பொறுத்த வரை அனைத்து நடிகர்களும் வருகிற அக்டோபர் 18ஆம் தேதி நடைபெறவுள்ள நடிகர் சங்க தேர்தலில் அனைத்து நடிகர்களும் வாக்களிக்க வேண்டும். நாங்கள் அனைவரும் ஒரு நோக்கத்துக்காக போராடி வருகிறோம். எங்களுடைய நோக்கம் இப்போது கடைக்கோடி கன்னியாக்குமரி வரை போய் சேர்ந்துள்ளது எங்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. அவர்கள் கூறுவதை போல் நாங்கள் யாருக்கும் சரக்கோ கோழி பிரியாணியோ வாங்கி கொடுக்கவில்லை. நாங்கள் சங்கத்துக்காக செலவழிக்கும் பணம் அனைத்தும் எங்கள் சொந்த பணம். எங்கள் சங்கத்தின் பொருளாளர் கார்த்தி மிகவும் பொறுப்புள்ளவர். கார்த்தி தான் எங்கள் சங்கத்தின் கணக்கு வழக்குகளை கவனித்து வருகிறார்.

 

நாங்கள் யாரோ பைனான்சியரிடம் இருந்து பணம் பெற்று சங்க வேலைகளை செய்கிறோம் என்று ராதாரவி குற்றம் சாட்டியுள்ளார். அது தவறான தகவல். அந்த பைனான்சியரின் முகவரியை அவர்கள் கொடுத்தால் நாங்கள் அவரை சந்திக்க தயாராக உள்ளோம். நான் இதுவரை என்னுடைய படத்தை தயாரிக்க தான் பைனான்சியாரை நாடியுள்ளேன். இன்று சங்க கூட்டத்தில் ஆயிர கணக்கில் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். இன்று அறிவிக்கப்பட்ட தேர்தல் அறிக்கை மிகச் சிறந்த வரவேற்ப்பை பெற்றுள்ளது” என்றார்.

No comments:

Post a Comment