ஆன்லைன் மூலம்
மருந்து விற்பனை செய்யப்படுவதால், மருத்துவர் அனுமதி சீட்டில்லாமலும், கலாவதியான மருந்துகளாகவும்,
தரமற்ற மருந்துகளாக நேரிடலாம் என மற்ற மருந்து வணிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால்
மத்திய அரசு அதற்கு செவி சாய்க்க வில்லை. இதை கண்டித்து, நாடு முழுவதும் இன்று ஒரு
நாள் அடையாள வேலை நிறுத்தமும், ஆர்பாட்டமும் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. இந்நிலையில்
கரூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே கரூர் மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கத்தினர் அச்சங்கத்தின்
மாவட்ட தலைவர் சுப.செந்தில் நாதன் தலைமையில் மத்திய அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.
இந்த ஆர்பாட்டத்தில் செயலாளர் அனிலா ஜெய்குமார், பொருளாளர் தன்வந்திரி பாலு உள்ளிட்ட
மருந்து வணிகர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஆர்பாட்டத்தை துவக்கி வைத்த
கரூர் திருக்குறள் பேரவை செயலாளரும், மருந்து வணிகருமான மேலை.பழநியப்பன் தெரிவிக்கையில்
24 மணி நேர மருந்து வணிகர்கள் தங்களது கடையை அடைத்து மத்திய அரசிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சுமார் 650 கடைகள் இன்று ஒரு நாள் மூடப்பட்டுள்ளன. தரமற்ற மருந்துகள், ஆண்மை ஊக்கிகள்
ஆகியவைகள் விற்பனை செய்யப்படுவதால் ஏராளமான பக்க விளைவுகள் ஏற்படும் என அனைத்து மருந்து
வணிகர்கள் கோரிக்கை விடுத்தும் எந்த வித பயனுமில்லாத நிலையில் இந்த போராட்டத்தை நாங்கள்
நடத்தி வருவதாக தெரிவித்தார். மேலும் இந்த அறப்போராட்டத்தில் அரிசி வணிகர்கள் சங்கம்,
தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை, அனைத்து வணிகர்கள்
சங்க பேரவை, ஹோட்டல் உரிமையாளர் சங்கப் பேரவை என பலதரப்பட்ட சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன
என்றார்.
பேட்டி : மேலை.பழநியப்பன்
– மருந்து வணிகர் – திருக்குறள் பேரவை - கரூர்
No comments:
Post a Comment