கொடி காத்த குமரன், கொடி காத்த கோமன் என்றெல்லாம் நமது
பாடப்புத்தகங்களில் படித்த நமது கொடிகாத்த குமரனுடைய 112 வது பிறந்த நாள் இன்று
கொண்டாடுகிறார்களோ இல்லையோ கரூரில் யாருமே கொண்டாடத அவல நிலை ஏற்பட்டுள்ளது. கட்சி
மதம், இனம், மொழி பாகுபாடி இன்றி பாடுபட்டவர்கள் சுதந்திர போராட்ட வீரர்கள், ஆனால்
அவர்களுடைய தன் இன்னுயிர்களை விடுத்து தான் தற்போது பேச்சுரிமை, எழுத்துரிமை என
அடிப்படை உரிமைகளும், சுதந்திர இந்தியா என்ற சுவாசத்தினையும் நாம் சுவாசிக்கிறோம்.
ஆனால் அப்படி பட்ட சுதந்திரத்திற்காக தன் இன்னுயிர்களை மாய்த்து கொண்ட போராட்ட
வீரர்களை அரசியல் கட்சியினர் மதிக்கா விட்டாலும் மாணவர்களாவது மதிக்க
வேண்டுமென்பது சமூக நல ஆர்வலர்களின் கோரிக்கையாகும், மேலும் கரூர் நகராட்சி
அலுவலகம், கரூர் நகர காவல் நிலையம் அருகே அமைந்துள்ள இந்த சிலையை யாரும்
கவனிப்பாறின்றி விட்டு விட்டதால் உடைந்து விலும் நிலையில் உள்ளது
குறிப்பிடத்தக்கது. கரூர் மாவட்ட நிர்வாகம் மட்டுமில்லாது கரூர் நகராட்சி
நிர்வாகமாவது விழித்துக் கொண்டு அவரது திரு வுருவச்சிலையை பேணிக் காக்க
வேண்டுமென்பது அனைவரது கோரிக்கையாகும்.
No comments:
Post a Comment