ஆம் ஆத்மி கட்சியின் மகாராஷ்டிர மாநில பாராளுமன்ற விவகாரக் குழு கலைக்கப்பட்டது. பல்வேறு மாநிலங்களில் கட்சியின் அமைப்பில் மறுசீரமைப்பு செய்து வரும் நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் சிறப்பாக செயல்படாததால் பாராளுமன்ற விவகாரக்குழு கலைக்கப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேசிய செயற்குழு உறுப்பினர் மயங்க் காந்தியுடன் கட்சி தலைமைக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதால், அவரை ஓரங்கட்டும் நடவடிக்கையாகவே இது பார்க்கப்படுகிறது.
இன்னும் சில நாட்களில் கட்சியில் மறுசீரமைப்பு செய்யப்படும். இதற்கு பொறுப்பாளராக தேசிய செயலாளர் பங்கஜ் குப்தா நியமிக்கப்பட்டுள்ளார்.
நன்றாக செயல்பட்டுக்கொண்டிருந்த மகாராஷ்டிர அணிகளைக் கலைத்தது கவலை அளிப்பதாக மயங்க் காந்தி தெரிவித்துள்ளார். “என்னை கட்சியில் வைத்திருக்க வேண்டுமா அல்லது வேண்டாமா? என்பதை கட்சியே முடிவு செய்யட்டும். நான் எனது கருத்துக்களை தெரிவித்துக்கொண்டே இருப்பேன். ஆம் ஆத்மி என்னை நீக்கினால், நான் அரசியலில் இருந்து விலகுவேன்” என்றும் அவர் தெரிவித்தார்.
கெஜ்ரிவாலை ஆதரித்து கடந்த ஜனவரி மாதம் பிரச்சாரம் செய்த மயங்க் காந்தி, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிரசாந்த் பூஷன், யோகேந்திர யாதவ் ஆகியோரை ஆதரித்ததால் அவர் மீது கட்சி தலைமை அதிருப்தியில் இருந்தது.
No comments:
Post a Comment