தமிழகத்தில் 58 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. ஐ.ஜி.க்கள் 5 பேர் ஏ.டி.ஜி.பி.க்களாகவும், டி.ஜ.ஜி.க்கள் 15 பேர் ஐ.ஜி-க்களாகவும் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். சென்னை மாநகர கூடுதல் ஆணையர் ஆபாஷ்குமார் காவலர் பயிற்சி ஏ.டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய அரசுப்பணியில் உள்ள ஐ.ஜி. ரவிச்சந்திரனுக்கு ஏ.டி.ஜி.பி.யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. கோவை ஆணையர் விஸ்வநாதன், சென்னை மாநகர போக்குவரத்துக்கழக ஏ.டி.ஜி.பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தெற்கு மண்டல ஐ.ஜியாக முருகனும், மத்திய மண்டல ஐ.ஜி.யாக சத்தியமூர்த்தியும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சேலம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ், கோவை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். எஸ்.பி. அன்பு டி.ஐ.ஜி.யாக பதவி உயர்த்தப்பட்டு நெல்லை மாநகர காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 8 எஸ்.பி.க்களுக்கு டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது அதில் கரூர் எஸ்.பி ஜோஷி நிர்மல் குமார் மாற்றப்பட்டு, அவருக்கு சென்னையில் ஒரு துறையில் டி.ஐ.ஜி யாக பொறுப்பேற்க உள்ளார். இதனை தொடர்ந்து கரூர் மாவட்ட காவல்துறைக்கு நல்ல காலம் பிறந்துள்ளது எனவும் எங்களை ஆயுத பூஜையே கும்பிட விடாமல் தடுத்ததாக கூறி மற்றக் காவலர்கள் உற்சாகமடைந்தனர்.
மேலும் கரூர் எஸ்.பி யாக பொறுப்பு வகித்த ஜோஷி நிர்மல் குமார் தான் ஒரு சீனியர் பேட்ஜ் என்றும் பெண் இனமான மாவட்ட ஆட்சியரை துட்சம் போல் பாவித்து வந்தார். இந்நிலையில் மறைந்த அப்துல்கலாமின் பிறந்த நாளைக்கு மாணவ, மாணவிகளின் பேரணிக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்காமல், தனியார் நிறுவனம் நடத்திய மாரத்தான் போட்டிக்கு காவல் அளித்தது சமூக நல ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை அளித்தது.
No comments:
Post a Comment