Friday, 16 October 2015

அர்த்தநாரீஸ்வரர் மலை கோயிலுக்கு யுவராஜை அழைத்துச் சென்று சிபிசிஐடி விசாரணை





கோகுல்ராஜ் கடத்தப்பட்ட பகுதி என கருதப்படும் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலை கோயிலுக்கு யுவராஜை அழைத்துச்சென்று சிபிசிஐடி அதிகாரிகள் இன்று காலைவிசாரணை நடத்தினர்.
சேலத்தை சேர்ந்த பொறியாளர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த யுவராஜ் கடந்த 11-ம் தேதி நாமக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் சரணடைந்தார். கடந்த 3 நாட்களாக நாமக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் யுவராஜிடம் எஸ்.பி நாகஜோதி மற்றும் காவல்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், கோகுல்ராஜ் கடத்தப்பட்ட பகுதி என கருதப்படும் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலை கோயிலுக்கு யுவராஜை அதிகாலையில் அழைத்துச்சென்று சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை சுமார் ஒருமணி நேரம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோகுல்ராஜ் கொலை நிகழ்ந்த அன்று, யுவராஜின் காருக்கு ஸ்டிக்கர் ஒட்டிக் கொடுத்த சங்ககிரியைச் சேர்ந்த ரமேஷ், கவுரி சங்கர் மற்றும் சிம்கார்டு விநியோகித்த நபர் ஒருவரை சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர்.
கடந்த 13-ம் தேதி சரணமடைந்த யுவராஜின் கார் டிரைவர் அருணை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி காவல்துறையினருக்கு நாமக்கல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

No comments:

Post a Comment