Tuesday, 3 November 2015

மக்கள் நல கூட்டியக்கம் சார்பில் கரூரில் ஆர்பாட்டம் ம.தி.மு.க பொறுப்பாளர் கபினி சிதம்பரம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் சுமார் 500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு



பருப்பு உள்ளிட்ட மனிதனின் அத்யாவசியப் பொருட்களின் விலை உயர்வை குறைக்ககோரி மத்திய மாநில அரசை கண்டித்து மக்கள் நலக் கூட்டியக்கம் சார்பில் கரூரில் ஆர்பாட்டம்

கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் பருப்பு உள்ளிட்ட அனைத்து பண்டங்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரி மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி மக்கள் நலக்கூட்டு இயக்கத்தின் சார்பாக முழக்கங்கள் எழுப்ப பட்டன. ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனீஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சியினரும், மக்கள் நலக்கூட்டியக்கம் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது. ம.தி.மு.க கரூர் மாவட்ட பொருப்பாளர் கபினி சிதம்பரம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து முழக்கங்கள் எழுப்பபட்டன. தமிழக அளவில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் கரூரில் ஏராளமான மக்கள் நலக்கூட்டியக்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் ஆர்த்தியா.பொன்னுசாமி, மாநில மாணரவரணி துணை செயலாளர் சுமங்கலி செல்வராஜ், மாநில இலக்கிய அணி துணை செயலாளர் பொத்தனூர். ஈழபாரதி, தாந்தோன்றி நகர செயலாளர் சத்தியமூர்த்தி, மாநில இளைஞரணி துணை செயலாளர் ஆசை சிவா மற்றும் நிர்வாகிகள் வைரம் கருணாநிதி, கருணாநிதி, முத்துக்குமா, சிபிராஜ் உள்ளிட்ட நிர்வாகிகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் வழக்கறிஞர் பாஸ்கர் என்கிற பகலவன், அக்னி.இல.அகரமுத்து உள்ளிட்டோரும் பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்

No comments:

Post a Comment