Friday 14 August 2015

சுதந்திர தினவிழா நிகழ்ச்சியில் தேசிய கொடியை ஏற்றி வைத்து 119 பயனாளிகளுக்கு ரூ.92.47 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயந்தி வழங்கினார்.!!!

கரூர் மாவட்டம், மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 15.08.2015 இன்று காலை 8.55 மணியளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் ச.ஜெயந்தி தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல் துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டதுடன் மற்றும் சாரண சாரணிய இயக்க மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்கள்.  பின்னர் அனைவரிடமும் சமத்துவம் நிலவும் வகையில் சமாதானப் புறாக்களை பறக்க விட்டு சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்கள்.  இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜோஷி  நிர்மல் குமார் முன்னிலை வகித்தார்.
      தொடர்ந்து முன்னாள் படைவீரர் நலத்துறையின் மூலம் 2 பயனாளிகளுக்கு ரூ.8000 மதிப்பில் நலத்திட்டங்களையும்ää வருவாய்த் துறையின் மூலம் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் 49 பயனாளிகளுக்கு 30 இலட்சத்து 43 ஆயிரத்து 500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் மாற்றுத் திறனாளிகள் சார்பாக 5 பயனாளிகளுக்கு ரூ.25 ஆயிரம் மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்களையும்,பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பாக 5 பயனாளிகளுக்கு ரூ.17120 மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்களையும்,  3 பயனாளிகளுக்கு ரூ.13647, மதிப்பிலான விலையில்லா சலவைப் பெட்டிகளையும், மாவட்ட அளவில் 10 மற்றும் 12ம் வகுப்பில் அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 42 மாணவ,  மாணவிகளுக்கு ரூ.1 லட்சத்து 19000  மதிப்பிலான கல்வி உதவித் தொகையினையும் வேளாண்மைத் துறையின் சார்பாக 3 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 39ஆயிரத்து 723  மதிப்பிலான இடுபொருட்கள்  மற்றும் வேளாண் உபகரணங்களும்ää தோட்டக்கலை துறையின் சார்பாக 3 பயனாளிகளுக்கு ரூ.1400  மதிப்பிலான இடுபொருட்களையும்ää புதுவாழ்வுத் திட்டத்தின் சார்பாக 7 கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு 58 இலட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான நிதியுதவி என 119 பயனாளிகளுக்கு ரூ.92 இலட்சத்து 47 ஆயிரத்து 390 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயந்தி வழங்கினார்.
      பின்னர் சிறப்பாக பணிபுரிந்த அரசுத் துறை அலுவலர்கள் மற்றும் காவல்துறையைச் சேர்ந்தவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழை வழங்கினார்.  அதனைத் தொடர்ந்து அரசு இசைப்பள்ளி, கரூர் சாரதா மகளிர் மேல்நிலைப் பள்ளி,  தாந்தோணிமலை, மலர்மெட்ரிக் பள்ளி, தாசிரெட்டிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,  பொரணி அரசு உயர்நிலைப்பள்ளி, கரூர் புனித தெரசா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கரூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, வெண்ணைமலை கொங்குமெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கரூர் பசுபதீஸ்வரா மகளிர் மேல்நிலைப் பள்ளி,  வெண்ணைமலை அன்புக்கரங்கள் குழந்தைகள் காப்பகம் ஆகிய பள்ளிகளின் மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
      இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் மு.அருணா,  மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முனைவர்  ரமேஷ் வேளாண்மை இணை இயக்குநர் மாது, முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி, கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் மரு.இராமநாதன்,  பொதுசுகாதாரத்துறை  துணை இயக்குநர் மரு.நளினி, வருவாய் கோட்டாட்சியர்கள் பாலசுப்பிரமணியன் (கரூர்), சக்திவேல் (குளித்தலை), மாவட்ட வழங்கல் அலுவலர் விமல்ராஜ், மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர்கள் ஜீனத்பானு (பொது),.மதனகோபால் (வேளாண்மை), செயற்பொறியாளர்,  (கட்டிடங்கள்) .ஜோதிமணி ஊராட்சிகளின் உதவி இயக்குநர் விஜயலட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






No comments:

Post a Comment